பலதும் பத்தும்

பாகிஸ்தானில் குறிவைத்து தாக்கப்படும் KFC உணவகங்கள்!

அமெரிக்காவிற்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேலின் காசா போருக்க்கான எதிர்ப்பு காரணமாக, பாகிஸ்தானில் அமெரிக்க துரித உணவு சங்கிலியான KFC இன் உணவகங்கள் மீது 10க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பல நபர்களை பாகிஸ்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெற்கு துறைமுக நகரமான கராச்சி, கிழக்கு நகரமான லாகூர் மற்றும் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட இஸ்லாமிய நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள KFC துரித உணவகங்கள் மீது குறைந்தது 11 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

தாக்குதல்கள் தொடர்பில் இந்த வாரம் குறைந்தது 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லாகூரில் பதிவான தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து, நகரைச் சுற்றியுள்ள 27 KFC விற்பனை நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறிகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button