பலதும் பத்தும்

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் திடீர் மரணம்!

இதய பிரச்னை தொடர்பாக சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ்த் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது திடீர் மறைவு தமிழ்த் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மனோஜ் பாரதியின் மறைவு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது தந்தையின் இயக்கத்தில் ’தாஜ்மகால்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி, ’சமுத்திரம்’, ’அல்லி அர்ஜுனா’, ’வருஷமெல்லாம் வசந்தம்’ எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ்.

இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் ’இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button