பலதும் பத்தும்

30 இலட்சத்துக்கு ஏலம் போன நீலப்பறவை

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர், 2006ஆம் ஆண்டில் ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகிய தொழில்நுட்ப வல்லுனர்களால் உருவாக்கப்பட்டு அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அந்த நிறுவனத்தின் இலச்சினையாக (லோகோ) பறவையை தேர்ந்தெடுத்தனர்.

சமூக வலைத்தள செயலிகளில் பெரும் புரட்சியை ட்விட்டர் உருவாக்கியது. அதன்பின், 2012ஆம் ஆண்டு ட்விட்டரில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அதன் இலச்சினை, இளைய தலைமுறையினரை கவரும் வகையில் நவீனமயமாக்கப்பட்டு, ஒற்றை நீல பறவையாக மாற்றப்பட்டது. சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள தங்களுடைய தலைமையக கட்டிடத்திலும் இராட்சத அளவில் தயாரான ‘நீலப்பறவை’ இலச்சினையை பொருத்தினர்.

அதன்பின்னர் அந்த இலச்சினை அந்த நிறுவனத்தில் அடையாளமாக மாறியது. 2023இல் ட்விட்டர் நிறுவனத்தை பெரும் தொழிலதிபரான எலான் மஸ்க் கையகப்படுத்தி ‘எக்ஸ்’ என அதற்கு மறுபெயரிட்டார். அத்தோடு நீலப்பறவை இலச்சினை பயன்பாடும் நின்றது. மேலும் நிறுவன கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த நீலப்பறவை இலச்சினை அகற்றப்பட்டது.

இந்தநிலையில் அரிய பொருட்களை ஏலம்விடும் பிரபல நிறுவனம் ஒன்று ‘எக்ஸ்’ நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த ‘நீலப்பறவை’ இலச்சினையை கையகப்படுத்தி ஏலம் விட்டது. 12 அடி நீளம், 9 அடி அகலம், 254 கிலோ எடை கொண்ட அந்த இலச்சினை 30 இலட்சத்துக்கு (34 ஆயிரம் அமெரிக்க டொலர்) ஏலம் போனதாக அறிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button