இலங்கை

திருகோணமலையில் இருந்து வந்த விமானம் மினுவாங்கொட பகுதியில் விழுந்து விபத்து

வாரியபொல – மினுவங்கொட பகுதியில் ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 பயிற்சி ஜெட் விமானம் இன்று (21) காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்ததாகவும், அவர்கள் இருவரும் பாதுகாப்பாக வெளியேற முடிந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பாராசூட்டின் உதவியுடன் அவர்கள் விமானத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜெட் விமானம் திருகோணமலையில் உள்ள சீன விரிகுடா விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

ரேடார் தொழில்நுட்ப அமைப்பின் செயலிழப்பு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், விமானம் தீயில் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரியபொல பகுதியில் ஜெட்  விபத்து

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *