பலதும் பத்தும்

சக்திவாய்ந்த விமானப் பயண கடவுச்சீட்டு ; இலங்கைக்கு எத்தனையாவது இடம்?

ஒவ்வொரு நாடுகளுக்கும் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய இடங்களைக் கருத்தில் கொண்டு “தி ஹென்லி” தரவரிசைப் பட்டியலில் இலங்கை 91ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, உலகின் மிகவும் சக்திவாய்ந்த விமானப் பயண கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கிறது.

99 இடங்களைக் கொண்ட இந்தப் பட்டியலில், ஈரானும் சூடானும் இலங்கையுடன் சமமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 42 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

இந்தப் பட்டியலில் ஜப்பான் மற்றும் தென்கொரியா இரண்டாவது இடத்திலும், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், பயண விசா தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

2024 இல் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் இலங்கை 96ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

அதன்படி, இந்த வருடம் இலங்கை 5 இடங்கள் முன்னேறியுள்ளது.

ஒவ்வொரு நாடும் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய இடங்களைக் கருத்தில் கொண்டு, பயண அனுமதிகளின் வலிமையை தரவரிசைப்படுத்தும் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஹென்லி & பார்ட்னர்ஸ் ஒன்றாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button