பலதும் பத்தும்

முடிவுக்கு வரும் ‘Skype’ செயலி

மைக்ரோசொப்ட் நிறுவனம் வீடியோ, ஓடியோ அழைப்புகள் மேற்கொள்வதற்காக 2003-ம் ஆண்டு ஸ்கைப் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்பட்டு வந்த ஸ்கைப் செயலி 50 மில்லியன் பயனாளர்களை எட்டி சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில், ஸ்கைப் செயலியின் சேவை எதிர்வரும் மே மாதம் 5-ம் திகதியுடன் முடிவுக்கு வருவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்கைப் செயலிக்கு பதிலாக மைக்ரோசாப்ட் டீம் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே ஸ்கைப் பயனாளர்கள் தங்கள் விவரங்களை Microsoft Teams-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button