முச்சந்தி
எலான் மஸ்க்கிற்கு கூடுதல் அதிகாரம்:.. அமெரிக்காவின் நிழல் ஜனாதிபதியா?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

வாஷிங்டனில் உயர் அதிகாரிகளின் எதிர்ப்பை மீறி எலான் மஸ்க்கிற்கு அதிபர் ட்ரம்ப் கூடுதல் அதிகாரங்களை அளித்துள்ளது அமெரிக்க அரசியலில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எலான் மஸ்க்கிற்கு கூடுதல் அதிகாரம்!
உலகின் முன்னணி பணக்காரரும் பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்கு பெரிதும் துணை நின்றார். தேர்தல் வெற்றிக்குப்பின் அமெரிக்க அரசின் நிர்வாகத்தை முற்றிலும் சீர்திருத்தும் புதிய அமைப்பிற்கு தலைவராக எலான் மஸ்க்கை ட்ரம்ப் நியமித்தார்.தற்போதய சூழ்நிலையில் அமெரிக்காவில் அரசு உயரதிகாரிகளில் இருந்து கடைநிலை ஊழியர்கள் வரை வேலையை விட்டு அனுப்புவதில் இருந்து பழைய நடைமுறைகளை ரத்து செய்வது வரை மஸ்க்கின் செயல்பாடுகள் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.
ஆனாலும் இந்த எதிர்ப்புகளை புறந்தள்ளி மஸ்க்குக்கு இன்னும் கூடுதல் அதிகாரங்களை தரும் அறிவிப்பை ட்ரம்ப் அண்மையில் வெளியிட்டுள்ளார்.
ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் நாஜி வணக்கம் செலுத்தி சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்க், தற்போது வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்புக்கு சமமாக அமர்ந்து பேசும் அளவுக்கு ட்ரம்புடன் மிக நெருக்கமான உறவுகளை பேணி வருகிறார்.
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் எலான் மஸ்க் தன் செயல்களை நியாயப்படுத்தி வருகிறார். இந்த நடவடிக்கைகளுக்காகத் தான் மக்கள் தங்களுக்கு வாக்களித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மஸ்க் ஏற்கனவே எடுத்த பெரும்பாலான நடவடிக்கைகள் அமெரிக்க சட்ட விதிகளை தாண்டி எடுக்கப்பட்டுள்ள நிலையில் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பவும் :
இதனால் அரசின் செயல்பாடுகளை எதிர்த்து அமெரிக்காவில் சர்ச்சைகள் வெடித்துள்ளன. எலான் மஸ்க்கை செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பிவிடுங்கள் என வாஷிங்டனில் ஒரு பதாகையில் எழுதப்பட்டிருந்தது.
தற்போது அவருக்கு கிடைத்துள்ள அதிகாரங்கள் இன்னும் என்னென்ன விளைவுகளை
ஏற்படுத்துமோ என்ற அச்சம் அமெரிக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏற்படுத்துமோ என்ற அச்சம் அமெரிக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் இருந்து அதிகாரங்கள் எலான் மஸ்க்கிற்கு கை மாறுகிறதா என்ற ரீதியிலும் அமெரிக்காவில் கேள்விகள் எழுந்துள்ளன. அதிபர் மட்டுமே பேட்டியளிக்கும் வெள்ளை மாளிகையில் இருந்து மஸ்க் பேட்டியளித்த நிலையில் ‘பிரசிடென்ட் மஸ்க்’ என்றே சமூக வலைத் தளங்களில் பரலாக பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
உலகின் முன்னணி செல்வந்தர் :
உலகின் முன்னணி தொழில் நுட்ப கம்பனிகளின் உரிமையாளர், டெஸ்லா என்ற கார்த் தயாரிப்பு கம்பனி, ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், எக்ஸ் என்ற சமூக ஊடக வலை தளம் கம்பனிகளின் பெயர்களை இப்படி பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம்.
எலான் மஸ்க் 400 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடக் கூடிய உலகின் மிகப் பெரும் செல்வந்தராக இருந்தாலும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு உதவி செய்தார். பிரசாரத்திற்கு பெருமளவு பணமும் கொடுத்தார் என்பது வெளிப்படை.
இந்த உதவிக்கு பிரதி உபகாரமாக ஆட்சி அதிகார கட்டமைப்பில் முக்கியமானதொரு பதவியை வழங்கப் போவதாக ட்ரம்ப் அறிவித்து இருந்தார்.முதற்கட்டமாக அரச செயற்றிறன் திணைக்களம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் தலைமைப் பதவியை இலோன் மஸ்க்குக்கு வழங்குவதே ட்ரம்பின் திட்டமாக இருந்தது. இதன் மூலம், அமெரிக்க அரசியலில் இலோன் மஸ்க்கின் ஆதிக்கத்தை வலுவாக உறுதிப்படுத்துவது ட்ரம்பின் நோக்கமாக இருந்தது.
சர்ச்சைக்குரிய எலான் :
சமகால அரசியல், சமூக, பொருளாதார, தொழில்நுட்ப உலகில் எலான் மஸ்க்கின் பாத்திரம் எந்த வகையிலும் தவிர்க்க முடியாதது. ஆனால் அமெரிக்காவில் அதுவே தீவிர சர்ச்சைக்குரியதாக உள்ளது.
ஒரு புறத்தில் வலுவான இலட்சியமும், தொலை நோக்கும் கொண்டு உலகை அடுத்த கட்டததிற்கு நகர்த்தும் தொழில் முனைவராக எலான் மஸ்க் விளங்குகிறார். மறுபுறத்தில் தமது தொழில் நுட்பத்தைத் தாண்டியும் அரசியல் ஆதிக்கத்தை செலுத்த முனையும் அதிகார ஆளுமையை பிரயோகிக்க முயல்கின்றார்.
அமெரிக்காவின் அரசியலைக் கட்டமைத்து, சர்வதேச அரசியல் கருத்தாடல்கள் எத்திசையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மனிக்கக் கூடிய சக்தியாக தம்மை மாற்றிக் கொள்ள எலான் மஸ்க் எத்தனிக்கிறார். இந்த எத்தனிப்பு சமகால செயற்பாடுகளில் தெளிவாக வெளிப்படுவதை அவதானிக்கலாம்.
டுவிட்டர் பின்னர் எக்ஸ் :
சில வருடங்களுக்கு முன்னர், டுவிட்டர் சமூக வலை தளத்தை எலான் மஸ்க் கொள்வனவு செய்தார். அதனை ‘எக்ஸ்’ என்று பெயர் மாற்றம் செய்தாரோ அன்றைய நாளில் இருந்து அவரது அரசியல் பயணம் தீவிரம் பெற்றது.
மேற்குலகைப் பொறுத்த வரையில், ‘எக்ஸ்’ என்பது மிகவும் செல்வாக்கு செலுத்தக்கூடிய சமூக ஊடகமாகும்.
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான பயனாளிகள் எக்ஸில்
இணைந்திருக்கிறார்கள். இவர்களில் செல்வாக்கு செலுத்தக் கூடிய அரசியல்வாதிகள், வர்த்தக பிரமுகர்கள், வாக்காளர்கள் என்று பல தரப்பினரும் உள்ளடங்குகிறார்கள்.
இணைந்திருக்கிறார்கள். இவர்களில் செல்வாக்கு செலுத்தக் கூடிய அரசியல்வாதிகள், வர்த்தக பிரமுகர்கள், வாக்காளர்கள் என்று பல தரப்பினரும் உள்ளடங்குகிறார்கள்.இந்த பயனாளிகளின் மீது தாம் விரும்பும் கருத்தை திணிக்கும் சக்தி எலான் மஸ்க்கிற்கு உண்டு. எந்தெந்த கருத்துக்களுக்கு இடமளிக்கலாம், எந்தக் கருத்தை பெருப்பித்துக் காட்டி, எந்தக் கருத்தை மூலையில் தள்ளி விடலாமென எலான் மஸ்க் தீர்மானிக்கும் வல்லமை அவரிடம் உண்டு.
சர்வதேச அரசியலில் எலான் மஸ்க்:
2023இல் பிரிட்டனில் முஸ்லிம் புகலிடக் கோரிக்கையாளர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கலவரத்தைத் தூண்டியதன் பின்னணியில், எக்ஸ் தளத்திற்கு முக்கின பங்கு இருக்கிறது என்ற பரவலான குற்றச்சாட்டு உள்ளது.
பிரிட்டனில் சிவில் யுத்தம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று எலான் மஸ்க் பதிவிட்டதையும், அதன் அரசியல் விளைவுகளையும் ஒரு உதாரணமாக கூறலாம்.ஜேர்மனியில் வெளிநாட்டவர்கள் வந்து குடியேறுவதை ஆட்சேபிக்கும் ஏ.எவ்.டி என்ற கடும் போக்கு தீவிர வலது சாரி கட்சியையும் எலான் மஸ்க் ஆதரித்தார். இந்தக் கட்சியே ஜேர்மன் மக்களை மீட்டுக்கக் கூடிய சக்தி உள்ளவர்கள் என்றும் பதிவிட்டார்.
எலான் மஸ்க்கின் இத்தகைய பதிவுகள் ஊடக நெறிமுறைகளுக்கு முரணனானது மாத்திரமன்றி, ஐரோப்பிய ஒன்றியம் சார்ந்த சட்டங்களையும் மீறுகிறதா என்றும் விமர்சிக்கப்பட்டது.
இதேபோன்று தான், வெனிசுலாவின் ஜனாதிபதி தேர்தலிலும் எலான் மஸ்க் செல்வாக்கு செலுத்த முனைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
![]()