உலகின் பணக்கார நகரம் எது தெரியுமா?

உலகின் பணக்கார நகரம் எது? மற்றும் அதன் மூலதனம் என்ன? என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
குளோபல் SWFஇன் சமீபத்திய அறிக்கை, உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி, அபுதாபி உலகின் பணக்கார நகரம் என்று தெரியவந்துள்ளது. அக்டோபர் 2024 நிலவரப்படி, UAE எமிரேட் 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ.142 லட்சம் கோடி) மதிப்புடன் முதலிடத்தை பெற்றுள்ளது.
இந்த பெரிய மூலதனமும் செல்வமும் அபுதாபியை மற்ற பணக்கார நகரங்களான ஓஸ்லோ, பெய்ஜிங், சிங்கப்பூர், ரியாத் உள்ளிட்டவற்றை முந்துவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த ஆறு நகரங்களில் உள்ள செல்வத்தின் மொத்த மதிப்பு சுமார் 12.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.1,000 லட்சம் கோடிக்கு மேல்) ஆகும். அபுதாபியின் ராயல் பிரைவேட் அலுவலகங்கள் நிர்வகிக்கும் 344 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.28 லட்சம் கோடி) இந்த 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலருடன் கணக்கிடப்படவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த அலுவலகம் அரச குடும்பத்தின் தனியார் முதலீடுகளை கையாளுகிறது. இந்த தனியார் சொத்துக்கள் அபுதாபியின் ஒட்டுமொத்த செல்வத்தையும் மேலும் அதிகரிக்கும்.
![]()