இலங்கை

பௌத்த மதத்துக்கு முதன்மை இடம்: வரலாற்றுப் பின்னணியை வெளியிட்ட ரணில்

இலங்கை அரசமைப்பின் 9ஆவது உறுப்புரையின் மூலம் பௌத்த மதத்துக்கு முதன்மை இடம் வழங்கப்பட வேண்டும் என்றும், இது பிரித்தானிய ஆட்சியாளர்களால் கண்டித் தலைவர்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்று ஒப்பந்தத்தின் வெளிப்பாடு என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை மிஹிந்து மகா சயையின் புதிய சிகரக் கலசமும் சூடாமணியும் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று(18) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார்.

பௌத்த மதம்

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நவீன நாடுகளான இலங்கைச் ஜனநாயகச் சோசலிசக் குடியரசிலும் தாய்லாந்து இராச்சியத்திலும் பௌத்த மதம் ஒரே விதமாகவே பேணப்பட்டு வருகின்றது.

எமது நாட்டிலும் தாய்லாந்திலும் அனைத்து மதங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதையும், ஒவ்வொருவருக்கும் தாம் விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை உள்ளது என்பதையும், மதத்தின் அடிப்படையில் எவருக்கும் பாகுபாடு காட்ட முடியாது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பௌத்த மதத்துக்கு முதன்மை இடம்: வரலாற்றுப் பின்னணியை வெளியிட்ட ரணில் | Primary Status Accorded Buddhism Reflection

நமது அரசமைப்பின் 9ஆவது உறுப்புரையின் ஊடாக பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் வழங்கப்பட்டுள்ளது. இது நம்மால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல. 1815ஆம் ஆண்டில் பிரித்தானியர்களால் கண்டித் தலைவர்களுடன் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

1954ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த போதும் இக்கட்டமைப்பு கௌரவத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இறையாண்மை

தாய்லாந்து நாட்டின் மத உரிமைகள் மற்றும் ஆட்சிமுறை குறித்துச் சுட்டிக்காட்டிய அவர்,” “தாய்லாந்திலும் எம்மைக் போலவே மதச் சுதந்திரம் நிலவுவதுடன், இறையாண்மை மக்களிடமே உள்ளது.

மக்கள் சார்பாக இறையாண்மையை நடைமுறைப்படுத்தும் மன்னர் ஒரு பௌத்தராக இருக்க வேண்டும் என்பது அந்நாட்டு அரசமைப்பால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அங்கு பௌத்த மதத்தைப் பாதுகாத்து உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசமைப்புச் சட்டத்தின் கீழ் மன்னருக்கு வழங்கப்பட்டுள்ளது. கம்போடியாவிலும் இதே நிலைமையே காணப்படுகின்றது.

மதச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அதேவேளையில், நாம் பௌத்த மதத்தையும் பாதுகாக்கின்றோம்.

மிஹிந்து மகா அரஹந்த தேரரின் பரிநிர்வாணம் நினைவுகூரப்படும் இத்தருணத்தில், தாய்லாந்து மக்களின் பங்களிப்புடனும் அந்நாட்டுப் பிரதிப் பிரதமரின் வருகையுடனும் இத்தூபியின் புதிய சிகரக் கலசம் திறந்து வைக்கப்பட்டமைக்குத் தாய்லாந்து அரசுக்கும் மக்களுக்கும் அவர் தனது நன்றியையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *