ராஜஸ்தான் டேங்கர் லொறி விபத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் எரிவாயு டேங்கர் தீப்பிடித்து எரிந்ததில் ஏற்கனவே 19 பேர் உயிரிழந்தனர்.

பலர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *