பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 46ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானி தலிபான் என்ற கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தங்கள் நாட்டின்மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதாகவும், இது பயங்கரவாத அமைப்பு எனவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இந்த அமைப்பைக் குறிவைத்து அவ்வப்போது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவருகிறது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் உள்ள 7 கிராமங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் அனைவரும் பொதுமக்கள் என்றும், இதில் பெண்கள், குழந்தைகளே அதிகம் என்றும் தகவல் வெளியானது.

இந்த தாக்குதலை அடுத்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button