சிட்னியில் ‘மஹாகவி’ நூல் வெளியீடும் நினைவுப் பகிர்வும்… ஐங்கரன் விக்கினேஸ்வரா

சிட்னி மகாஜனார்களின் ஆதரவில் “மஹாகவி” உருத்திரமூர்த்தி அவர்களின் நூல்கள் வெளியீடும் நினைவுப் பகிர்வுகளும் நடைபெற உள்ளது.
ஈழத்தின் பெருங்கவியான மஹாகவி உருத்திரமூர்த்தி அவர்களின் நூல்கள் வெளியீடு நாளை 13/12/2024 வெள்ளிக்கிழமை மாலை ஆறு முப்பது மணிக்கு கில்ட்போர்ட் சமூக மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இலக்கம் 90, ஓ’நீல் தெரு, கில்ட்போர்ட், சிட்னி.(Guilford Community Centre, 90 O’Neill St., Guilford) எனும் முகவரியில் சிட்னி மகாஜனார்களின் ஆதரவில் “மஹாகவி” உருத்திரமூர்த்தி அவர்களின் நூல்கள் வெளியீடும் நினைவுப் பகிர்வுகளும் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் மஹாகவியின் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் நாடகங்கள் மற்றும் அரங்க நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.
அத்துடன் மஹாகவி ஆக்கங்களிலிருந்து கவிதைகள், பாடல்கள் மற்றும் தனிநடிப்பு போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
விழா சிறப்புடன் அமைய குறித்த நேரத்துக்கு வருகை தந்து ஒத்துழைக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வேண்டிக் கொண்டுள்ளனர்.
![]()