காதலையும் தாண்டி இடைவெளி அதிகமாகிவிட்டது; ரஹ்மான் – பானு விவாகரத்து

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதி விவாகரத்து செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவாகரத்து தொடர்பில் தனித்தனியாக அறிவிப்பு வெளியானது.

அதன்படி,  புதன்கிழமை சாய்ரா பானு தரப்பு வழக்கறிஞரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியது.

குறித்த அறிக்கையில்,

“பல ஆண்டுகால திருமண வாழ்க்கையையடுத்து, தனது கணவர் ரஹ்மானிடமிருந்து பிரிவது எனும் கடினமான முடிவை எடுத்துள்ளார்.

இருவருக்கும் ஏற்பட்ட உணர்வுப்பூர்வ வேறுபாட்டின் காரணமாகவே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இருவருக்குள்ளும் இருந்த அதீத காதலையும் தாண்டி ஏற்பட்ட பதற்றம் மற்றும் சிரமங்கள் இருவருக்குள்ளும் இடைவெளியை ஏற்படுத்திவிட்டது.

மிகுந்த மன வலியுடனேயே சாய்ரா பானு இம் முடிவை எடுத்திருக்கிறார்.

இத் தருணத்தில் அவரவரின் தனிப்பட்ட விருப்பங்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

ரஹ்மான் தரப்பில்,

“எங்கள் திருமண வாழ்வின் மிகச் சிறப்பான 30 வருடங்களை நிறைவு செய்வோம் என எதிர்பார்த்தோம். ஆனால், அவை எதிர்பாராத முடிவுகளை எட்டிவிட்டது.

உடைந்துபோன இதயங்களினால் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கும். அதுபோல உடைந்தவை ஒருபோதும் மீண்டும் சேராது. இந்த இக்கட்டான வேளையில் உங்கள் அன்புக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button