இந்தியா

சிரிக்காமல் பேட்டி கொடுக்கிறார் பழனிசாமி: முதல்வர் கிண்டல்

10 ஆண்டு காலம் அ.தி.மு.க., சிறந்த ஆட்சியை தந்தது என சிரிக்காமல் பேட்டி கொடுக்கிறார் பழனிசாமி’ என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திட்டத்தை அறிவித்தோம். நிதி ஒதுக்கினோம். அதிகாரிகள் பார்த்து கொள்வார்கள். நாம் ஓய்வு எடுப்போம் என்று எண்ணுகிறவன் நான் அல்ல. முந்தைய ஆட்சி காலத்தில் ஒரு சிலர் இருந்தார்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாது. தெரிந்தாலும் தெரியாத மாதிரி இருப்பார்கள். டிவியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொல்வார்கள். நான் பிரச்னையை எதிர் கொண்டு தீர்த்து வைக்கிறேன். மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை கொண்டு வருகிறேன்.

திட்டங்கள் எப்படி செயல்படுகிறது என்று கள ஆய்வு செய்கிறேன். சொன்ன திட்டங்கள் சொன்ன நாட்களில் திறந்து வைக்கிறேன். இதனை எங்கு சென்றாலும் மக்கள் என்னை வரவேற்கிறார்கள். தேடி வந்து மனுக்களை கொடுக்கிறார்கள். மக்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்.

மக்கள் என் மீதும் தி.மு.க., மீதும் மக்கள் வைத்துள்ள அன்பும், பாசமும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் தன்னை மறந்து விடுவார்கள் என்று நினைத்து தினமும் மீடியா முன்பு நின்று கொண்டு பழனிசாமி பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். 10 ஆண்டு காலம் அ.தி.மு.க., சிறந்த ஆட்சியை தந்தது என்றும், தி.மு.க., சிறப்பான ஆட்சியை தரவில்லை என்றுமு் சிரிக்காமல் பேட்டி கொடுக்கிறார் பழனிசாமி.

பொய்க்கு மேக்கப் போட்டால் உண்மை ஆகிவிடாது. அது இன்னும் பளிச் என்று அம்பலப்பட்டு போகும். தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்று பழனிசாமி நடத்தினார். 3 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு சேர்த்துவிட்டேன் என்று பெருமையோடு பேசுகிறார். பழனிசாமியிடம் நான் கேட்கிறேன். நீங்க நடத்திய மாநாடு மூலம் எவ்வளவு கோடி ரூபாய் முதலீடு வந்தது. இதனை புள்ளி விவரங்களுடன் சொல்ல முடியுமா?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button