சம்பள அதிகரிப்பு தீர்மானம்பொய்யானது ; அரச ஊழியர்களை ஏமாற்றிய ரணில்

அரச ஊழியர்களின் சம்பளத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்க கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவைத் தீர்மானம் என்பது தேர்தலில் வாக்கு வேட்டைக்காக எடுக்கப்பட்ட பொய்யான தீர்மானம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சாடியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெறுவதற்கு முதல் நாளன்று அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.

என்றாலும், ஜனாதிபதித் தேர்தலில் கடந்த அரசாங்கத்தின் அறிவிப்புகளை நிராகரித்திருந்த அரச ஊழியர்கள் பெரும்பான்மையான மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்திக்கு வெற்றியை அளித்திருந்தனர்.

பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க தமது அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க பிரச்சார மேடைகளில் கூறிவருகிறார்.

இதற்கு அரசாங்கத்தின் தரப்பில் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருவதுடன், ரணில் அரசாங்கம் தேர்தலில் வாக்கு வேட்டைக்காகவே எவ்வாறு போலியான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தாகவும் அரசாங்கம் கூறுகிறது.

நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியானது ரணிலின் பொய்யான வாக்குறுதியாகும்.

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்ட போதிலும் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் அந்த அமைச்சரவை பத்திரத்தை பார்க்கும் போது திறைசேரி அல்லது நிதியமைச்சின் அதிகாரிகளின் அங்கீகாரத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல அது. குறித்த முடிவை அமல்படுத்த எந்தவொரு வழிமுறையும் இல்லை. இது தேர்தல் காலத்தில் அரச ஊழியர்களை தவறாக வழிநடத்துவதற்காக வழங்கப்பட்ட பொய்யான வாக்குறுதியாகும்.” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button