உலகம்

டொரெண்டோவில் இந்திய வம்சாவளி இளைஞர் மரணம் – 07 மாதங்களின் பின் சந்தேகநபர் ஒருவர் கைது

கனடாவின் டொராண்டோவில் உள்ள இல்லமொன்றில் டிசம்பர் 20 ஆம் திகதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 30 வயதான ஹிமான்ஷி குரானா, என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த மரணம் தொடர்பில் அவரின் துணைவரான 32 வயதான அப்துல் கஃபூரி, சந்தேக நபராக அறிவிக்கப்பட்டு, முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் அவர் டொராண்டோ விமான நிலையத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டொராண்டோ காவல்துறையின் தப்பியோடியவர்களைப் பிடிக்கும் பிரிவு மற்றும் கொலைப் பிரிவு அதிகாரிகள், அவரைக் கண்டுபிடித்து கனடாவிற்குத் திரும்பக் கொண்டுவர தேசிய மற்றும் சர்வதேச சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து பணியாற்றினர். அவர் எந்த நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார் என்பதை காவல்துறை வெளியிடவில்லை.

இது தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படும் எனவும், வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button