பிரதமர் மோடிக்கு பாலாபிஷேகம்

பிரதமர் மோடியின் பிறந்த நாளான  (செப்.,17) விஸ்வகர்மா ஜெயந்தியும் கொண்டாடப்படுவதால், பா.ஜ., பிரமுகர் ஒருவர் அவரின் படத்தை விஸ்வகர்மாவாக சித்தரித்து பூஜை மற்றும் பால் அபிஷேகம் செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

(செப்.,17) பிரதமர் நரேந்திர மோடிக்கு 74வது பிறந்தநாள். அதனை முன்னிட்டு நாடு முழுவதும் பா.ஜ., தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதேநாளில் விஸ்வகர்மா ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள வேத பாடசாலையில் பா.ஜ., பிரமுகர் ஒருவர், பிரதமர் மோடியின் படத்தை விஸ்வகர்மாவாக சித்தரித்து பூஜை மற்றும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார்.

பிரதமர் மோடியை கடவுளாக சித்தரித்து அபிஷேகம் செய்த இந்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து அந்த பா.ஜ., பிரமுகர் கூறுகையில், “நவீன இந்தியாவின் விஸ்வகர்மா பிரதமர் மோடி தான். அவர் நம் நாட்டை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியுள்ளார்” என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button