முச்சந்தி

மகிந்த அணியின் உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை: கடிதங்கள் அனுப்பி வைப்பு

இலங்கைத்தீவில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாக களமிறங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க இணைந்த மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான கடிதங்கள் விரைவில் குறித்த உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பின்னர் கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அண்மையில் கூடியிருந்தது.

கட்சியில் இருந்து ஒருவரை வேட்பாளரை நியமிப்பது என்ற முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எம்.பிக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் அரசியல் குழுவிற்கு கடந்த சில வாரங்களாக பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியிலேயே, கட்சியின் தீர்மானங்களை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பான கடிதங்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *