பங்களாதேஷ் காபந்து அரசின் பிரதமர்: ரணிலுடன் ஆலோசனை

கடுமையான போராட்டங்களால் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள பங்களாதேஷை மீண்டும் ஸ்திரப்படுத்துவதற்கு ஆதரவை வழங்குமாறு அந்நாட்டின் புதிய பிரதமர் மொஹமட் யூனுஸ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

பங்களாதேஷின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மொஹமட் யூனுஸுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பங்களாதேஷுக்கு தன்னால் இயன்ற ஆதரவை வழங்குவதாக ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

அதேபோன்று பங்களாதேஷில் முதலீடு செய்துள்ள இலங்கை வர்த்தகர்களை அங்கு தங்கி தமது வர்த்தகத்தை மேற்கொள்ளுமாறு அறிவித்துள்ளதாக பங்களாதேஷ் பிரதமரிடம் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *