முச்சந்தி

இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள்: புத்தளத்தில் 50 இற்கும் மேற்பட்டோர் கைது

இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட 50 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் புத்தளத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இயங்கி வந்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய பொலிஸார் ஹோட்டலை சுற்றிவளைத்துள்ளனர்.

இந்த குழுவில் 44 ஆண்களும் 09 பெண்களும் உள்ளடங்குவதாக பதில் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இந்தச் சோதனையின் போது 98 கையடக்கத் தொலைபேசிகள், 44 கணனிகள் மற்றும் பல ஐ.எஸ்.எம் அட்டைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் இரு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபா கைப்பற்றப்பட்டதாக ருவான் குணசேகர மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button