தமிழகம் மற்றும் கர்நாடக அரசைக் கண்டித்து தே.மு.தி.க மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகம் மற்றும் கர்நாடக அரசைக் கண்டித்து தே.மு.தி.க எதிர்வரும் 25ஆம் திகதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியும், காவிரி நீரைத் திறக்க மறுக்கும் கர்நாடக அரசின் செயற்பாடைக் கண்டித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போராட்டத்தில் அனைத்து மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், விவசாயிகள் ,பொதுமக்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button