பலதும் பத்தும்

புற்றுநோய், தொற்று நோய்களுக்கான புதிய மருந்தை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்

mRNA சிகிச்சைகள் மூலம் செல்களுக்குள் அதிக புரதத்தை உற்பத்தி செய்வதற்கான ஒரு சாத்தியமான வழியைக் கண்டறிந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின் விஞ்ஞானிகள் Johns Hopkins Medicine, தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டுப்பிடிப்பானது புற்றுநோய், தொற்று நோய்கள் மற்றும் தன்னுடல் தாக்குநோய்களுக்கான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், அசிடைல்சைடிடின் அல்லது ac4C எனப்படும் இயற்கையாக நிகழும் ஒரு RNA மாற்றத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

170-க்கும் மேற்பட்ட அறியப்பட்ட RNA மாற்றங்கள் உள்ளன, ஆனால் அவற்றில் ஒரு சிறிய துணைக்குழு மட்டுமே mRNA சிகிச்சை நோக்கங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்று விஞ்ஞானி பின் வூ கூறியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் மற்றும் அதன் மூலம் சாதகமான பலன் கிடைக்குமானால், தொற்று நோய், புற்றுநோய் மற்றும் தன்னுடல் தாக்குநோய்களுக்கு எதிராகப் போராடும் தடுப்பூசிகளை உருவாக்க வழியமைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button