கொங்கோவில் போராட்டக்காரர்களின் தாக்குதலில் 70 பேர் உயிரிழப்பு!

ஆபிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடான கொங்கோவில் (Congo)போராட்டக்காரர்களின் தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொங்கோ தலைநகர் கின்ஷாசாவிலுள்ள கின்செல் கிராமத்தில், கடந்த சில ஆண்டுகளாக இரண்டு சமூகங்களுக்கு இடையே மோதல் நிலை நீடித்து வருகின்றது.

இந்நிலையில், கொங்கோ கிழக்கில் போராளிகள் ஆயுதங்களுடன் போரிட்டு வரும் நிலையில், நாட்டின் மேற்கு பகுதியிலும் வன்முறை தீவிரமடைந்துள்ளது.

இந்த தாக்குதலில் 9 இராணுவ வீரர்கள் உட்பட 70 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், இந்த பகுதியில் வன்முறையை கட்டுப்படுத்த இராணுவத்தினர் போராடி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் கொங்கோவின் ஜனாதிபதி பெலிக்ஸ் சிசெகெடி முன்னிலையில் போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்ட போதிலும், இரு சமூகங்களுக்கிடையில் மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளன.

கொங்கோ இராணுவம் வன்முறையை அடக்குவதில் தோல்வியடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வரலாற்று குடிமக்கள் மற்றும் கொங்கோ ஆற்றின் அருகே குடியேறிய யக்கா உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இடையே, நில உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button