மனைவி உட்பட 42 பெண்களை கொலை செய்து குப்பைக் கிடங்கில் வீசிய நபர்

கென்யாவில் மனைவியுடன் சேர்த்து மொத்தம் 42 பெண்களை கொலை செய்த ஜோமைசி கலிசியா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கவனிப்பாரற்று கிடந்த குவாரியொன்றிலுள்ள குப்பைக் கிடங்கிலிருந்து தொடர்ந்து பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது குவாரியின் அருகிலேயே இருந்த ஜோமைசியின் வீட்டை சோதனை செய்து பார்த்ததில், 10 கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணினி, அடையாள அட்டைகள் பெண்களின் ஆடைகள், கத்தி, 9 சாக்குகள் என கைப்பற்றப்பட்டன.

தனது மனைவியை கொலை செய்ததோடு தொடர்ந்து 42 பெண்களை கொலை செய்து அவர்களின் உடல்களை கவனிப்பாரற்று கிடக்கும் குவாரியில் வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட ஜோமைசி ஒப்புக்கொண்டார்.

என்ன காரணத்துக்காக இத்தனை கொலைகள் செய்தாரென்ற காரணம் இன்னமும் வெளியாகவில்லை. ஆனால், அவரது வீட்டிலிருந்து கைப்பற்றிய பொருட்களை வைத்து பார்க்கும்பொழுது ஒருவேளை அந்த பொருட்களை அபகரிப்பதற்காக இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.

இதுதொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button