குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப்: துணை ஜனாதிபதியாக ஜே.டி.வான்ஸ் பரிந்துரை

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை முன்னிறுத்த அக்கட்சி முடிவுசெய்துள்ளது.

அத்துடன், ஓஹியோவின் செனட்டர் ஜே.டி.வான்ஸ் குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதியாக செயற்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்பின் மிகவும் நம்பகமான பாதுகாவலர்களில் ஒருவராக ஜே.டி.வான்ஸ் மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை ட்ரம்ப் தோற்கடித்தால், துணை ஜனாதிபதியாக ஜே.டி. வான்ஸ் நியமிக்கப்படுவார்.

விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் குடியரசுக் கட்சி மாநாடு நடைபெற்ற நிலையில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனிடையே, ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தனது துணை ஜனாதிபதியாக வான்ஸை தேர்வு செய்தது குறித்து ஜனநாயக கட்சி கவலையும் அதிருப்தியும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை பென்சில்வேனியாவில் டிரம்பின் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து சில குடியரசுக் கட்சியினர் இன்னும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button