ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் சுதந்திர மக்கள் காங்கிரஸ்: பலர் இணையும் சாத்தியம்

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சித்தாவல்களும் பரவலாக இடம்பெற்றுவருவதனை அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில், சுதந்திர மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி திலக் ராஜபக்‌ஷ மற்றும் லலித் எல்லாவல ஆகியோர் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி உறுதியாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், அந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய பேராசிரியர் ஜி.எல். பிரிஸ் டிலான் பெரேரா, நாலக கொடஹேவா உள்ளிட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button