நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பொலிஸ் நாய்: ஒரு கோடி ரூபா பெறுமதியான 07 குட்டிகளை ஈன்றது

பொலிஸ் உத்தியோகபூர்வ நாய்கள் திணைக்களத்தின் கடமைகளில் ஈடுபடுத்துவதற்காக 58 மில்லியன் ரூபா செலவில் நெதர்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட நாய்களில் இருந்த ஸ்பானியல் என்ற பெண், கண்டியில் உள்ள உத்தியோகபூர்வ மோப்ப நாய்த் தலைமையகத்தில் கடந்த 08ஆம் திகதி 07 குட்டிகளை ஈன்றுள்ளது.

இந்த ஏழு ஸ்பானியல் நாய்க்குட்டிகளின் பெறுமதி ஒரு கோடி ரூபாயை அண்மித்துள்ளதாக பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய் பிரிவு தெரிவித்தது.

மேலும் இந்த விலங்குகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த நாய்களுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகபூர்வ நாய்ப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,

ஏழு குட்டிகளும் தாயும் கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும், மிருகங்களுக்கு அருகில் செல்ல யாருக்கும் அ னுமதி கிடையாது என்றும் தெரிவித்தார்.

மேலும், தாயும் குட்டிகளும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 35 நாய்கள் 08-12 வயதுக்கு இடைப்பட்டவை என்றும், ஒரு மாத காலம் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், குற்றவியல் விசாரணை, போதைப்பொருள் சோதனைகள், வெடிகுண்டு விசாரணைகள் தொடர்பான பயிற்சிக்கு அனுப்பப்படும் என்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காஞ்சன கொடகும்புர தெரிவித்தார்.

நெதர்லாந்தில் உள்ள K10 Workingdogs என்ற தனியார் விலங்கு பண்ணையில் இருந்து குறித்த மோப்ப நாய்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக 58 மில்லியன் ரூபா அல்லது 580 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாய்களில், 13 பெல்ஜிய மலினோயிஸ் நாய்கள், 12 ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் மற்றும் 10 ஆங்கில ஸ்பானியல் நாய்கள் உட்பட 35 நாய்கள் இருப்பதாக பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றில் 8 முதல் 12 மாதங்களுக்கு இடைப்பட்ட 21 நாய்கள் பெண் நாய்கள் என கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button