காசா மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதலில் 29 பேர் பலி

காசா நகரில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவின் அப்சான் பகுதியில் உள்ள அல்- அவ்டா பாடசாலை மீது குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் இந்த வான் வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள கான் யூனிஸ் நாசர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பபடுகிறது.

தாக்குதலிலின் போது சுமார் 2000 பேர் பாடசாலையில் இருந்துள்ளதாகவும், கடந்த 4 நாட்களில் காசாவில் தாக்கப்பட்ட 4ஆவது பாடசாலை இதுவென குறிப்பிடப்படுகிறது.

இந்த தாக்குதலை மோசமான படுகொலை என்று தெரிவித்துள்ள பாலஸ்தீன ஊடகம், உயிரிழந்த 29 பேரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரிவித்துள்ளது. 

காசா மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதலில் 29 பேர் பலி | 29 Killed In Israeli Airstrike On Gaza

நாங்கள் பாடசாலையின் வாசலில் அமர்ந்திருக்கும்போது, ரொக்கெட்டுகள் எங்களை நோக்கி பாய்ந்தன’ என்று தாக்குதலில் உயிர்பிழைத்த முகமது சுக்கார் என்பவர் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் அல்- அவ்டா பாடசாலை அருகில் ஹமாஸ் உறுப்பினர்கள் பதுங்கியிருந்ததாகவும் அதனாலேயே தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button