சட்னியில் துள்ளி விளையாடிய எலி
இந்தியாவின், தெலுங்கானா மாநிலம் சுல்தான்பூரிலுள்ள கல்லூரி விடுதியின் சிற்றுண்டிச் சாலையில் பெரிய பாத்திரமொன்றில் சட்னி நிரப்பி வைக்கப்பட்டிருந்தது.
அந்த சட்னி நிரம்பிய பாத்திரத்தில் எலியொன்று நீந்தி விளையாடுகிறது.
இது வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
குறித்த வீடியோவில் பணியாளர்களின் சுகாதார பராமரிப்பில் குளறுபடி உள்ளது என்று தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாகவே ஹோட்டல் உணவுகளில் பல்லி இறந்து கிடக்கின்றமை, கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்த பாம்பு கிடக்கின்றமை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன.
தற்சமயம் கல்லூரி விடுதியொன்றில் தயாரிக்கப்பட்ட சட்னியில் எலியொன்று ஓடித் திரிவதைப் பார்க்கும்போது, இவ்வளவு கவனக் குறைவாக உணவுகள் தயாரிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
![]()