மின்சார கேபிளில் மோதி விமானம் விபத்து: மூவர் உயிரிழப்பு

பிரான்ஸின் வடக்கு பிராந்தியமான Seine-et-Marne இல் சிறியரக விமானம் ஒன்று A4 நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலிய விமான சேவைக்குச் சொந்தமான இந்த விமானம் வியன்னா நோக்கி பயணித்த போது விபத்து நேர்ந்துள்ளது.

சக்திவாய்ந்த மின் கம்பியில் விமானம் மோதி நெடுஞ்சாலையில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, விபத்து காரணமாக நெடுஞ்சாலையின் போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், விபத்து தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button