பலர் முன்னிலையில் பறிபோன உயிர்கள்: ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலி

நீர்வீழ்ச்சியொன்றை பார்வையிடச் சென்ற குழுவினர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் மும்பைக்கு அருகிலுள்ள லோனாவாலா பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியின் வெள்ளநீர் ஓட்டத்தில் சிக்கி அவர்கள் அனைவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நேற்று (30) இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டனர், அவர்களில் இருவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது.

மேலும் மூவரின் சடலங்கள் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன மற்ற இருவரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

மும்பை நகரிலிருந்து 80 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள லோனாவாலா மலைப் பகுதியில் விடுமுறையைக் கழிக்க இந்தக் குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற போதே இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அருவியில் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட குழுவை அருகில் இருந்த ஒருவர் கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவுசெய்துள்ளார்.

தற்போது குறித்த காணொளில் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button