லடாக்கில் ஆற்றைக் கடக்கும்போது 5 ராணுவ வீரர்கள் நீரில் மூழ்கியதால் பரபரப்பு

லடாக்கில் பயிற்சியின் ஒரு பகுதியாக ஆற்றைக் கடக்கும்போது இந்திய இராணுவ வீரர்கள் ஐந்து பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்ட அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லடாக் தலைநகர் லே-வில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதி நியோமோ-சுஷுல். இங்குள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ) அதிகாலை 1 மணி அளவில் பயிற்சியின்போது டேங்கர் லாரியில் ராணுவ வீரர்கள் ஆற்றைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 5 ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மந்திர் மோர் என்ற இடம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விபத்தை அடுத்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button