யு/ஏ சான்றிதழ் பெற்ற விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மகாராஜா.
இத் திரைப்படத்தில் பாரதிராஜா, அனுராக் காஷ்யப், நட்டி, முனிஷ்காந்த், மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்க, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
அண்மையில் இப் படத்தின் ட்ரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
இந்த நிலையில் இப் படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
மகாராஜா திரைப்படம் எதிர்வரும் 14ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

![]()