விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு; ‘ரீ ரிலீஸாகும் 5 சூப்பர்ஹிட் திரைப்படங்கள்
ஜூன் 22 ஆம் திகதி விஜய் அவரது 50 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது அரசியல் பிரவேசத்தின் பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இதுவென்பதால் இது ஸ்பெஷல் தான்.
இந்நிலையில் விஜய்யின் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பும் நல்லபடியாக நிறைவடைந்து செப்டெம்பர் 5ஆம் திகதி வெளிவரவுள்ளது.
இதன்படி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியாகிய சூப்பர் திரைப்படங்கள் ரீ ரிலீஸாகவுள்ளன.
அந்த வரிசையில், 21ஆம் திகதி, பகவதி, போக்கிரி, துப்பாக்கி, மாஸ்டர், அழகிய தமிழ் மகன் ஆகிய 5 திரைப்படங்கள் ரீ ரிலீஸாகவுள்ளன.
அதில், லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் உலகளாவிய ரீதியில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளமை விஜய் இரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஒரு செய்தியாக உள்ளது.
![]()