“COVID-19 நோய்த்தொற்று இருந்தாலும் பரவாயில்லை…..ஆஸ்திரேலியப் பொதுவிருது டென்னிஸ் போட்டியில் விளையாடலாம்”

இம்மாதம் நடைபெறும் ஆஸ்திரேலியப் பொதுவிருது டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டாளர்கள் COVID-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.

கிருமித்தொற்று இருந்தாலும் பரவாயில்லை அவர்கள் போட்டிகளில் களமிறங்கலாம் எனப் போட்டியின் இயக்குநர் கிரேக் டிலே (Craid Tiley) தெரிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய முடிவு அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளதாக அவர் சொன்னார்.

2021ஆம் ஆண்டுப் போட்டி பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்றது. போட்டியைக் காண பார்வையாளர்கள் பலநாள்கள் அனுமதிக்கப்படவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்ததால் 9 முறை விருதை வென்ற நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic) போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

ஆனால் இம்முறை சமூகத்திலுள்ள நடைமுறையைப் பின்பற்றத் தாங்கள் விரும்புவதாகத் திரு. கிரேக் டிலே Reutersஇடம் சொன்னார்.

ஒருவேளை உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டிலேயே இருக்குமாறு விளையாட்டாளர்களையும் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களையும் தாங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button