நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு?; செம்மணியில் எதிர்ப்புப் போராட்டம்

‘நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு?’ எனும் பெரும் கோசத்துடன் யாழ் செம்மணியில் வெள்ளிக்கிழமை(19) பிற்பகல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார செம்மணி மனிதப் புதைகுழி பகுதியை பார்வையிட அங்கு வருகை தரவிருந்த நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து,வட கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இப் போராட்டத்தில் கலந்து கொள்வதில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களுக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவை பெற்ற்றிருந்த போதும் இந்தப் போராட்டம் நடைபெற்றது..
அங்கு பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் இப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
![]()