மோதிப்பார்க்க நான் தயார்; சாகர தெரிவிப்பு

நான் மக்களுக்காகவும் பொலிஸாரின் சுயாதீனத்துவம் தொடர்பிலுமே கதைத்தேன். அதற்காக எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகின்றதென்றால் மோதிப்பார்க்க நான் தயாராகவே இருக்கின்றேன் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை மத்திய குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர், அங்கு சென்றிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சாகர காரியவசம் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நீதிமன்றத்திற்கு என்னைப்பற்றி பொலிஸாரால் விளக்கமளிக்கப்பட்டுள்ளதா என்று எனக்கு தெரியாது. ஆனால் என்னை விசாரணைக்கு வருமாறு இன்று (நேற்று) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நான் இங்கு வந்துள்ளேன். முதுகெலும்புடன் வந்துள்ளேன். நான் கொள்கலன் திருட்டு, திறைசேரி திருட்டில் ஈடுபடவில்லை. என்மீது பாரதூரமான குற்றச்சாட்டுகளும் கிடையாது. மக்களுக்காக கதைத்தேன். சிறைக் கைதிகளின் உரிமைகள் மற்றும் பொலிஸாரின் சுயாதீனத்துவத்துடன் செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலேயே கதைத்தேன். அதற்காக நடவடிக்கை எடுக்கப்படுகின்றதென்றால் மோதிப்பார்போம். நான் பொலிஸ்மா அதிபர் தொடர்பாக தனிப்பட்ட ரீதியில் எதனையும் கூறவில்லை.
![]()