முதுகில் போதைப்பொருள் பொட்டலத்துடன் பறந்துவந்த புறா…..கனடா சிறையில் பிடிபட்டது

முதுகில் போதைப்பொருள் பொட்டலத்துடன் பறந்துவந்த புறா ஒன்று கனடா சிறைச்சாலையில் பிடிபட்டது. சம்பவம் கடந்த மாதம் 29ஆம் தேதி நிகழ்ந்தது.

புறாவின் முதுகில் கட்டப்பட்டிருந்த பொட்டலத்தினுள் கிரிஸ்டல் மெத் (crystal meth) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறைச்சாலையின் பொழுதுபோக்கு மைதானத்தின் அருகே புறா காணப்பட்டது. அங்குதான் கைதிகள் ஓய்வெடுப்பார்கள், விளையாடுவார்கள். அங்கு பணியில் இருந்த காவல் அதிகாரிகளின் கண்களில் புறா தென்பட்டது.

புறாவின் நடமாட்டம் குறித்துச் சந்தேகம் எழுந்ததால், அதிகாரிகள் புறாவைப் பிடித்தனர்.
அதன் முதுகிலிருந்த பொட்டலத்தைக் கழற்றி எடுத்துவிட்டு புறாவை அவர்கள் மீண்டும் பறக்கவிட்டதாக CBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பொட்டலத்தினுள் 30 கிராம் அளவுக்கு கிறிஸ்டல் மெத் இருந்தது.

கைதிகளில் யாரும் புறாவுக்குப் பயிற்சியளித்தனரா அல்லது வெளியாட்கள் அதனை அனுப்பினரா என்பதை அதிகாரிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. சம்பவத்தையடுத்து சிறைச்சாலையில் சுற்றுக்காவல் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. விசாரணை தொடர்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button