இலோன் மஸ்க் புதிய சாதனை… 200 பில்லியன் டாலரை இழந்த உலகின் முதல் நபர்
உலகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான திரு. இலோன் மஸ்க், தம்முடைய சொத்து மதிப்பில் 200 பில்லியன் டாலரை இழந்திருக்கிறார்.
அவ்வளவு பணத்தை இழந்துள்ள உலகின் முதல் நபர் அவர்தான்!…
Amazon நிறுவனர் ஜெஃப் பேஸோஸிற்கு (Jeff Bezos) அடுத்த நிலையில், 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துகளைக் கொண்ட உலகின் இரண்டாவது ஆகப் பெரும் செல்வந்தர் என்ற பெருமையைக் கொண்டிருந்தவர் மஸ்க்.
Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அவருடைய சொத்து மதிப்பு,137 பில்லியன் டாலருக்குச் சரிந்திருப்பதாக Bloomberg Billionaires Index தெரிவித்தது.
2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி அவருடைய சொத்து மதிப்பு, 340 பில்லியன் டாலராக இருந்தது.
அவரே உலகின் ஆகப் பெரிய செல்வந்தராக இருந்தார்.
ஆனால், தற்போது ஆடம்பரப் பொருள் விற்பனைக் குழுமம் LVMHஇன் தலைமை நிர்வாகி பெர்னட் அர்னால்ட் (Bernard Arnault) முதல்நிலைப் பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.
Tesla பங்குகளின் விலை சரிந்ததும், Twitter நிறுவனத்தை வாங்குவதற்காக மஸ்க் தம்முடைய பங்குகளை விற்றதும், அவரின் சொத்து மதிப்பைப் பாதித்திருப்பதாக Bloomberg செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
எனினும் Tesla நிறுவனம் என்றும் காணாத அளவு நன்கு செயல்பட்டு வருவதாக, அண்மையில் மஸ்க் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க மத்திய வங்கி, மிதமிஞ்சிய வேகத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தியதே பிரச்சினைகளுக்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
![]()