நடுகைக்காரி!… 43 …. ஏலையா க.முருகதாசன்.

![]()
பிரின்சிபலின் அறையை நோக்கி நடந்து கொண்டிருந்த ஞானமும் புஸ்பகலாவும் ஒருவரையொருவர் பார்ப்பதும் தலைகுனிந்து தரையைப் பார்த்து நடப்பதுமாக இருந்தனர்;.
பதட்டத்துடன் நடந்து கொண்டிருந்த புஸ்பகலாவின் கால்விரல் கல்லில் தடுக்குப்பட „ஐயோ’ என்று அவள் சொல்ல, „என்ன’ என்று கேட்டவாறு ஞானம் அருகில்வர „ஒன்றுமில்லை’என்று அவள் சொல்ல, கீழே குனிந்து அவள் விரல்களைப் பார்த்த ஞானம் அவளின் பெருவிரலிலிருந்து இரத்தம் கசிவதைக் கண்டவன் தனது காற்சட்டைப் பைக்குள்ளிருந்து லேஞ்சியை வேகமாக எடுத்துக் குனிந்து உட்கார்ந்து அவளின் பெருவிரலைச் சுற்றி லேஞ்சியால் கட்டிக் கொண்டிருக்க நிலைதடுமாறிய புஸ்பகலா ஞானத்தின் முதுகில் கையை ஊன்றி சமாளித்துக் கொள்கிறாள்.
பிரின்சிப்பலின் அறை இருக்கும் மாடிமண்டப கட்டிடத்தடியிலேதான் இரத்தம் கசிந்து கொண்டிருந்த புஸ்பகலாவின் பெருவிரலைச் சுற்றி ஞானம் லேஞ்சியால் கட்டியவன்.
![]()
தா ங்கள் நிற்கும் இடத்திலிருந்து மேற்குப்புறமாக இருக்கும் மூன்று வகுப்பறைகளிலிருந்தும் மாணவர்களோ அல்லது அங்கு படிப்பித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களோ தான் குனிந்து அவளின் கால் பெருவிரலுக்கு லேஞ்சியால் கட்டிவிட்டதையோ, அவள் தனது முதுகில் கைவைத்து நிலைதடுமாறாமல் நின்றதையோ கவனிக்கிறார்களா எனக் கவனிக்கிறான்.புஸ்பகலாவும் தலையைத் திருப்பி அந்த வகுப்பறைகளைப் பார்த்தாள்.
ஞானம் புஸ்பகலாவின் கால்பெருவிரலுக்கு லேஞ்சியால் சுற்றிக் கட்டிவிட்டு எழுந்து இரண்டடி வைத்து நடக்க எதிரே ஓவிய ஆசிரியர் தம்பித்துரை மாஸ்ரர் வருவதை இருவரும் காணுகின்றனர்.அவரும் பூடகமான பார்வையுடன் புஸ்பகலாவையும் ஞானத்தையும் பாரத்துவிட்டு அவர்களைக் கடந்து செல்கிறார்.
அவரைக் கண்டதும் எதுவுமே நடக்காதது போல இருவரும் தலைகுனிந்து நடந்து கொண்டிருந்தனர்.நொண்;டி நொண்டி நடந்த புஸ்பகாவிடம் „நோகுதா’ என ஞானம் கேட்க, „நோகுந்தானே விரலிலை கல்லடிச்சால் நோகுந்தானே, விரல் என்ன சிரிக்குமா என்று மெதுவாகச் சிரித்துக் கொண்டே சொல்கிறாள்.
„இந்த அலட்சியமான கதையாலைதான் இப்ப நாங்கள் இரண்டு பேரும் பிரின்சிப்பலிட்டைப் போறம்’ என்று ஞானம் சொல்ல,’ஏன் பயமாகவிருக்கா, நடக்கிறது நடக்கட்டும் „ என்கிறாள் புஸ்பகலா.
பிரின்சிபலின் அறையடிக்குப் போன ஞானமும் புஸ்பகலாவும்,அவரின் அறைக் கதவு பாதி திறத்திருப்பதைக் கண்டதும் கதவைத் தட்டாமல் பிரின்சிபலின்
பார்வையில் தெரியும்படி அரைக்கதவு திறந்திருந்த இடத்தில் நின்று கொண்டிருந்தனர்.
கதிரையில் உட்கார்ந்தபடி குனிந்து எதையோ வாசித்துக் கொண்டிருந்த பிரின்சிபல் கனகசபாபதி மாஸ்ரர் தலையை நிமிர்த்திய போது ஞானமும் புஸ்பகலாவும் நிற்பதைக் கண்டதும்,உள்ள வாருங்கள் என கைச்சையால் காட்ட ஞானமும் புஸ்பகலாவும் உள்ளே நுழைந்தனர்.
இருந்த இடத்தைவிட்டு எழுந்த பிரின்சிபாலின் முகத்தில் ஒரு சிறு புன்னகை தோன்ற ஞானமும் புஸ்பகலாவும் நிம்மதியடைந்தனர்.
„ எப்படிப் படிப்பு போகுது இணர்டு பேரும் கவனமாக படிப்பிலும் கவனம் செலுத்துகிறீர்கள்தானே „ என்றுஉ பிரின்சிபல் கேட்க ஓம் என்று பதில் சொல்லாமல் ஞானமும் புஸ்பகலாவும் தலையை மேலும் கீழும் ஆட்டுகின்றனர்.
சில விநாடிகள் அமைதியாக இருந்த பிரின்சிபல்’இந்தப் பள்ளிக்கூடம் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் பள்ளிக்கூடம்,இங்கு ஆண் பெண் ஈடுபாட்டுக் கவர்ச்சி இருக்கவே செய்யும், அது இரு பகுதியினருக்கும் மகிழ்ச்சியைத் தரும்,படிக்கம் மாணவர்களை அது உற்சாகப்படுத்தும்.இங்கு பரீட்சை முடிவுகள் சிறப்பாக இருப்பதற்குக் காரணம் ஒரு வகுப்பில் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் அருகருகாக பார்த்துக் அதனால் ஏற்படும் மனக்கிளர்;ச்சி மட்டுமல்ல ஆசிரியர்கள் அறியா வண்ணம் கண்களாலும் கைவிரல்களாலும் ஆண் பெண் என அவர்கள் சைகளால் காட்டி மகிழ்வதும் ஒரு காரணமாகலாம்.இதுவும் உளவியல் ரீதியான உணமையாகும்…’
„நீங்கள் இரண்டு பேரும் ஒருவரையொருவர் விரும்புவதை நான் தடுக்கவில்லை, அதற்கு எனக்கு உரிமையில்லை.அதற்காக அவசரப்பட்டு ஆசிரியர்களை நோக்கி வார்த்கைளை விடாமல் இருக்கப் பாருங்கள்…’
„உங்களுடைய இரண்டு பேருடைய காதல் விவகாரத்தால்தான் உங்கள் இருவரின் படிப்பும் குறைந்தது என்று ஆசிரியர்கள் சொல்லும் நிலைக்கு உங்களைக் கொண்டு வராதீர்கள், காதலித்துக் கொண்டே படிப்பிலும் கெட்டிக்காரர்களாக இருக்க முடியும் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டுங்கள்’ என்றவர் „சரி நீங்கள் போகலாம்’ என்று பிரின்சிபல் கனகசபாபதி சொல்லி முடித்ததும்,பிரின்சிபல் என்ன சொல்லப் போகிறாரோ, தாய்தகப்பனை வரச் சொல்லி அவர்களோடு தங்கள் இருவரைப் பற்றியும் சொல்லப் போகிறாரோ, அதற்குப் பிறகு தங்கள் வீடுகளில் அதன் எதிரொலியாக என்னெ;ன நடக்கப் போகின்றதோ எனத் தயக்கத்துடனும், பயத்துடனும்,படபடப்புடனும் தவித்துக் கொண்டிணுந்த ஞானமும் புஸ்பகலாவும் ஆறுதலடைந்தனர்.அவர்கள் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் எதிர்மாறாக பிரின்சிபல் நடந்து கொண்டது அவர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது.
„வாறம் சேர்’ என்று வெளிக்கிட்டவர்களிடம்,’நான் உங்களுடன் கதைத்தது,உங்களுடனேயே இருக்க வேண்டும்,அது உங்களுடைய பொறுப்பு’
என்று பிரின்சிபல் கனகசபாபதி சொன்னதும்,இருவரும் ஓம் என்பது போலத் தலையாட்டிவிட்டு அறையைவிட்டு வெளிக்கிடும் போது புஸ்பகலா நொண்டியதைப் பார்த்து’ என்ன காலிலை’ என்று பிரின்சிபல் கனகனசபாதி மாஸ்ரர் கேட்க,பெருவிரலில் கல்லடித்ததைச் சொல்கிறாள் புஸ்பகலா.
பெருவிரலை லேஞ்சியால் சுற்றிக் கட்டி இருந்ததையும்,இரத்தம் கசிந்திருந்தையும்,கட்டிய லேஞ்சி ஆண்கள் பாவிக்கும் லேஞ்சி அது ஞானத்துடையதான் என்பதை ஊகித்துக் கொண்ட பிரின்சிபல் கனகசபாபதி,மெதுவாக ஒரு ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு „ கெமிஸ்ரி லாப்புக்கு போய்,லாப் உதவியாளர் பஞ்சாட்சர்த்திடம் மருந்துக் கட்டிப் போட்டு வகுப்புக்கு போ’ என்கிறார்.
பிரின்சிபாலின் அறையைவிட்டு வெளியே வந்து படியிறங்கியவுடன்’ நீங்கள் மருந்து கட்டிப் போட்டு வாருங்கள் ,நான் முன்னுக்குப் போறன்,மருந்து கட்டிப் போட்டு வரேக்கிலை முகத்தைச் சோகமாக வைச்சுக் கொண்டு வாருங்கள,; அப்பதான் பிரின்சிபல் நல்லாய்ப் பேச்சுக் குடுத்து அனுப்பியிருக்கிறார் என்று நினைப்பினம்,வகுப்புக்கு கிட்ட வரேக்கிலை கண்களை கையாலை கசக்கி கண்கள் இரண்டையும் சிவப்பாக்கிப் போட்டு வாருங்கள் அப்பதான் பிரின்சிபல்; கண்டிச்சிக்கிறார் நம்புவினம் „ என்று ஞானம் சொல்ல,’ எனக்குச் சொன்னால் மட்டும் போதாது „நீங்களும் முகத்தைச் சோகமாக வைச்சுக் கொண்டு போங்கள்’ என்று சொன்ன புஸ்பகலா கெமிஸ்ரி லாப்பை நோக்கி கிழக்குப் பக்கமாக போய்க் கொண்டிருந்தாள்.
வகுப்புக்குள் நுழைந்த ஞானத்தை,மாணவர்கள் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்க்கின்றனர்.ஞானத்தின் கண்கள் சிவந்திருப்பதைக் கண்டதும்,பிரின்சிபலிடம் பேச்சு வாங்கி வந்திருக்கிறான் என நினைக்கிறார்கள்.
வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரும் ஞானத்தை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு,எதுவும் கேளாமல் அவனுடைய இருக்கையில் போய் உட்காரச் சொல்லுகிறார்.
பிரின்சிபலைக் காட்டிக் கொடுக்கக்கூடாதென்பதற்காக குனிந்த தலை நிமிராமல் சோகமாக முகத்தை வைத்திருப்பது போல நடித்துக் கொண்டிருந்தான் ஞானம்.
ஞானத்துடன் பிரின்சிபலிடம் போன புஸ்பகலா ஞானத்துடன் திரும்பி வராததைக் கண்ட பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரும், மாணவர்களும் தூரத்தில் புஸ்பகலா வருகிறாளா எனப் பார்க்கின்றனர்.
ஞானத்தை ஆனுப்பிவிட்டு புஸ்பகலாவிற்கு நல்ல பேச்சு விழுகுது போல என ஆசிரியரும் மாணவர்களும் நினைத்துக் கொள்கின்றனர்.
ஞானத்திற்கு பக்கத்திலிருந்த மாணவன் தனபாலசிங்கம் „எங்கையடா உன்ரை ஆள்’ என்று கேட்க,’காலிலை காயம் மருந்து கட்ட கெமிஸ்ரி லாப்புக்கு போயிட்டா’ என்றவன்,தனக்குப் பக்கத்திலிருந்தவன் தன்னிடம் உன்ரை ஆள் என்று சொன்னதை
தான் ஏற்றுக் கொண்டு விட்டேனோ என நினைத்தவன், என்னையறியாமலே அவளை நான் காதலிக்கிறேனோ எனத் தடுமாறுகிறான்.
கையில் பேப்பரால் சுற்றிய சிறிய சரையுடன் புஸ்பகலா வந்து கொண்டிருந்தாள்.அவள் வகுப்புக்குள் நுழையவும் மத்தியானச் சாப்பாட்டுக்கான இடைவேளை மணி அடிக்கிறது.
பிரின்சிப்பல் எங்களைக் கூப்பிட்டுக் கதைத்தவரென்றபடியால் நிச்சயமாக சுந்தரராஜன் ரீச்சர் பிரின்சிபலிடம் என்னைப் பற்றியும் புஸ்பகலாவைப் பற்றியும் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் பிரின்சிப்பல் கோபப்படாமல் நாங்கள் காதலிப்பதை பெரிதாக எடுக்காமல் அறிவுரை கூறினாரே அதெப்படி நடந்தது என்று விடை தெரியாமல் யோசித்தபடி புஸ்பகலா தனது இருக்கையை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போது மத்தியான சாப்பாட்டு இடைவேளைக்காக மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேற, ஞானம் இருக்கையைவிட்டு எழுந்து நகராமல் அப்படியே நிற்கிறான்.
ஞானம் தனது இருக்கையைவிட்டு எழுந்து அப்படியே நிற்பதையும் புஸ்பகலா தனது இருக்கையை நோக்கிப் போவதையும் திரும்பிப் பார்த்துக் கொண்டே மாணவர்கள் அறையைவிட்டு வெளியே போக,புஸ்பகலாவோடு ஒன்றாக இருந்து மத்தியானச் சாப்பாடு சாப்பிடும் கட்டுவனைச் சேர்ந்த ஞானசௌந்தரி,புஸ்பகலாவின் கையைக் கிள்ளி, „என்ன உன்னையும் ஞானத்தையும் பிரின்சிப்பல் நல்லாய்ப் பேசிப் போட்டார் போலை அதுதான் ஞானத்தின்ரை கண்ணும் உன்ரை கண்ணும் அழுது சிவந்திருக்குது என்று நினைக்கிறன் „ என்கிறாள்.
„படிக்கிறதுக்கு வந்தனிங்களோ இல்லாட்டி லவ் பண்றதுக்கு வந்தனிங்களோ என்று பிரின்சிப்பல் எங்கள் இரண்டு பேரையும் சரியாய்ப் பேசியதுடன், இனி ஏதாவது உங்கள் இரண்டு பேரைப் பற்றியும் கேள்விப்பட்டனெ;றால் உங்கள் இரண்டு பேற்றையும் அம்மா அப்பாவைக் கூப்பிட்டுக் கதைக்க வேண்டிவரும் „என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு சிணுங்கியவாறு ஞானத்தைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே சொன்னதை ஞானசௌந்தரி நம்பி விடுகிறாள்.
„என்னமாய் புஸ்பகலா நடிக்கிறாள்’ என மனதில் நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்ட ஞானம் அவளுக்கருகில் வந்து „நான் சாப்பிட்டிட்டு வாறன் „என்று மெதுவாக புஸ்பகலாவிற்கு சொல்லிவிட்டு வகுப்பறையைவிட்டுப் போக,அவரவர் கொண்டு வந்த சாப்பாட்டுப் பார்சலைப் பிரித்து புஸ்பகலாவும் ஞானசௌந்தரியும் சாப்பிடத் தொடங்குகின்றனர்.
(தொடரும்)
![]()