முச்சந்தி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மாணவர்களுக்கான புலமைப்பரிசிலை நேற்று வழங்கினார்.

பொருளாதார ரீதியாக நலிவடைந்த மாணவர்களுக்காக இந்தியாவால் வழங்கப்படும் நிதி உதவி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்களில் இரண்டாம் தொகுதியினருக்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

2024ம் ஆண்டில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு மாணவர்கள் 100 பேர் தமது கற்கைநெறிக் காலம் வரை ஒவ்வொரு மாதமும் 7500 ரூபா வீதம் பெற்றுக்கொள்கின்றனர். அதன் அடிப்படையில் வருடாந்தம் 400 மாணவர்கள் இத்தொகையினைப் பெறுகின்றனர்.

இந்த நிகழ்வில் பதில் துணைவேந்தர் பிரதீபராஜா, பல்கலைக்கழக பதிவாளர், யாழ் இந்திய துணைத் தூதர் சாய் முரளி உள்ளிட்ட இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button