அனல்காற்றின் விளைவாகக் கண்ணில்பட்ட 300 ஆண்டுப் பழைமையான தோட்டம்
பிரிட்டனில் சுமார் 300 ஆண்டுகளாக மறைந்திருந்த தோட்டம் ஒன்று அனல்காற்று வீசியபிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஆளில்லா வானூர்தி மூலம் பதிவுசெய்யப்பட்ட காணொளியில் தோட்டத்தைக் கண்டுபிடிக்கமுடிந்தது.
டெர்பிஷயர் வட்டாரத்திலுள்ள Chatsworth Estate எனும் இடத்தில் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தோட்டம் இருந்தது.
ஐரோப்பியப் பாணியில் வடிவமைக்கப்பட்ட அந்தத் தோட்டம் 1699-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
தோட்டம் Duke of Devonshire என்ற உயரிய பட்டம் பெற்றவருக்குச் சொந்தமாக இருந்தது.
காலப்போக்கில் அங்கு அடர்ந்துவளர்ந்த புல் தோட்டத்தை மறைத்தது.
பிரிட்டனில் வீசும் அனல்காற்றால் தோட்டம் வறண்டு போனது.
அக்காலத்தில் இருந்த தோட்டத்தின் வடிவமைப்பைக் குறிக்கும் முக்கியக் கோடுகள் அந்த இடத்தில் மீண்டும் தென்பட்டன.
அது கடந்த காலத்தைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பை அளித்ததாகத் தோட்டத்தின் மேற்பார்வையாளர் ஸ்டீவ் போர்டர் சொன்னார்.
தற்போது Chatsworth House Trust charity என்று அறக்கட்டளையின் பொறுப்பில் உள்ள தோட்டம் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொள்கிறது.
தோட்டத்தில் அக்கால வடிவமைப்பை மீண்டும் கொண்டுவர விரும்புவதாகப் போர்டர் செய்தி நிறுவனத்திடம் சொன்னார்.
![]()