கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!… 31….. (உண்மைக் கதை) …. ஏலையா க.முருகதாசன்

யோகமலர் மஞ்சள் சுடிதாரில் சிரித்த முகத்துடன் நின்றிருந்தாள்.கையில் வைச்சிருந்த நன்றி சொல்லும் கார்ட்டையும், றேந்தை நூலால் பிண்ணப்பட்ட கழுத்துக்கு கட்டும் ஸ்காப்பையும் எனக்கு எடுத்துக் காட்டினாள். நன்றி தெரிவிக்கும் காரட்டில்; „தங்கள் அனைத்து உதவிகளுக்கும் மனப்பூர்வமான நன்றிகள் „ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

கார்டடில் என்னைக் கையெழுத்திடச் சொல்லித் தானும் கையொப்பமிட்டாள்.அவள் எந்தப் பதட்டமும் இல்லாமல் ஆங்கிலத்தில் திருமதி.யோகமலர் முருகதாசன் என்று கையொப்பமிட்டதைப் பார்த்து நான் திகைச்சுவிட்டன்.எனது முக நிலையைக் கண்டவள்’நான் உங்களப் பார்த்த நாளே நீங்கதான் என் புருசன் என்று அப்பவே தீர்மானிச்சு விட்டேனுங்க’ என்றாள்.

நேற்று இருந்த பதட்டம் இன்று அவளிடம் இல்லை.தெளிவான முகத்துடன் இருந்தாள்.

கழுத்தில் கட்டுகின்ற ஸ்காப் பல வண்ணங்களில் இருந்தது.’இதையும் விலைக்கா வாங்கினனீங்கள்’ என்று கேட்டன்.’இல்லை நான் பின்னியதுங்க’ என்றாள்.’நீங்களா பின்னினனீங்கள், சரியான கெட்டிக்காரியாக இருக்கிறீர்களே’ என்று வியப்புடன் சொல்ல,’நாளை இரவுக்குப் பிறகு உங்களுக்கு நான் முழுப் பெண்டாட்டியாகி விடுவேணுங்க,உங்களுக்க சுவற்றர் பின்னித் தருவேணுங்க. உங்களோட வாழும் காலம் வரைக்கும் உங்களுக்கு நானே எல்லாமா இருப்பேனுங்க, இன்னைக்கு ஒரு இரவுதானுங்க நீங்களும் நானும் தனித்தனியா தூங்கிற நாளுங்க…..’ என்று பூரித்தவள் „வாங்க அகமட்டை பார்த்துப் பேசி பேர்சனல் மனேஜரிட்டை போவதற்கு பெர்மிசன் எடுக்கனுமுங்க’ என்று அவள் துரிதப்படுத்த, நானும் அவளுமாக அகமட் இருக்கும் அறைக்குள் போன போது அவரே எழுந்து வெல்கம் என்று சொல்லி உள்ளே வாருங்கள் என்று அழைத்தார்.

பேர்சனல் மனேஜர் செரினைப் பார்த்து நன்றி சொல்ல வேண்டும் பெர்மிசன் எடுத்துத் தாருங்கள் என்று நான் கேட்கவும் தொலைபேசியை எடுத்து பேசியவர் „உடனே வரட்டாம் இருவரும் போங்கள் வேலை தொடங்க இன்னும் பத்து நிமிசங்களே இருக்கின்றன என்று அகமட் சொல்ல, பேர்சனல் மனேஜரைச் சந்திச்சுவிட்டு உங்களிடம் வருகிறோம் மன்னிக்கவும் என்று நான் சொல்ல யோகமலரம் ஒரே நேரத்தில் மன்னிக்கவும் என்று சொன்னதைக் கேட்ட அகமட் அகலக் கண்களைத் திறந்து வியப்புடன் எங்களிருவரையும் பார்த்தார்.

பேர்சனல் மனேஜரின் கதவைத் தட்டி மெதுவாகத் திறந்து கொண்டே ,’மே வி கம் இன்;’ என்று யோகமலர் கேட்க, „யா பிளீஸ் கம் இன் „ என்று சொல்ல நாங்கள் இருவரும் உள்ளே நுழைந்தம்.

வழமையாக பெரிய பதவியில் உள்ளவர்கள் தம்மிடம் வருபவர்களை எழுந்து வரவேற்பது அரிதிலும் அரிது.என்எம்பி பக்ரறிக்கு கடிதம் தந்த போது பேர்சனல் மனேஜர் இருந்து கொண்டுதான் வரவேற்றார்.

ஆனால் எங்கள் இருவரையும் எழுந்து வரவேற்று கைலாகு தந்தவர்,தனது மேசைக்கு முன்னாளிருந்த கதிரைகளில் எங்களிருவரையும் உட்காரச் சொல்லிக் கொண்டே தனது கதிரையில் உட்கார்ந்தார்.

அவராகவே கதைக்கத் தொடங்கினார், „இன்றையோடு இந்தப் பக்ரறியை விட்டுடுவியள்,நாளையிலிருந்து சிறீலங்காவும் மலேசியா ஜோகூர்பாருவும் இணையப் போகுது’ என்றவர், யோகமலரைப் பார்த்து „ இவரைக் காதலிக்கத் தொடங்கி இதுநாள் வரையும் நீங்கள் கன்னியாகவா இருந்தீர்கள்….’ ஏன்றவர் „அதுவும் நாளையோடு சரியாகிவிடும்’ என்று நகைச்சுவையாகச் சொல்லி வாய்விட்டுச் சிரிக்க யோகமலரின் முகம் சிவக்கத் தொடங்கியது.

வெட்கத்துடன்,கீழே குனிஞ்சு விரல்களின் நிகங்களைத் தடவிக் கொண்டிருந்தாள்.அதைப் புன்;னகையுடன் பார்த்த

பேர்சனல் மனேஜர் „ஓகே நான் ஏதாவது உதவி செய்ய வேணுமா „ என்று கேட்க நான் „இல்லை மடம் நீங்கள் நிறையவே செய்திருக்கிறீர்கள், ஒரே பக்ரறியில் வேலையும் ஒரே வீட்டில் இருக்கவும் உதவி செய்திருக்கிறீர்கள்.இது சாதாரண உதவியல்ல எங்கடை வாழ்நாளில் உங்களை மறக்கவே மாட்டோம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே என்னைப் பார்த்து எனது கையில் நீங்கள் செய்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி என்று எழுதிய கார்ட்டை தந்து ஏழுந்து குடுங்கள் என்று சொல்லிக் கொண்டே யோகமலரும் எழ,நான் எழுந்து அவரிடம் கார்ட்டை நீட்ட, அவரும் எழுந்து என்னிடம் இருந்து கார்ட்டை வாங்க, யோகமலர் அழகிய வண்ண பையை அவரிடம் நீட்ட’ என்ன இது என்று’ கேட்டுக் கொண்டே வாங்கியவர், பைக்குள் இருந்த றேந்தைப் பின்னல் கொண்ட ஸ்காப்பை எடுத்துப் பார்த்தவுடன்,’ ஓ…சுப்பர் „ என்றவர், தாங்யூ….தாங்யூ சோ மச்’என்று சொல்லிக் கொண்டே எங்களிருவருக்கும் „தாங்யூ…தாங்யூ „ என்று சொல்லிக் கொண்டே கைலாகு தந்தவர், உடனேயே அதை விரித்து முக்கோணமாக மடித்து தோளில் போட்டு முனைகள் இரண்டிலும் முடிச்சுப் போட்டார்.

அவர் உட்கார்ந்ததும், நாங்களும் உட்கார்ந்தோம்.மேசையில் வெயிட்டருக்கு கீழ் வைச்சிருந்த கடிதம் ஒன்றை எடுத்துத் தந்தவர்,’முன்பு தந்த கடிதத்தின் கொப்பிதான் இது,இது றிமைண்டர் கடிதந்தான் என்றவர்,’நான் உடனேயே கேட்க வேண்டும் என்று நினைச்சனான், இந்த ஸ்காப் வித்தியாசமாயிருக்கு ஜோகூருபாருவிலையா வாங்கினது என்று பேர்சனல் மனேஜர் கேட்டு முடிக்க முந்தி நான் உற்சாகமாக „ இல்லை எனது மனைவிதான் பின்னினவா’ என்று சொல்ல’ அப்படியா விலைக்கு வாங்கித் தரும் அன்பளிப்பைவிட, தனது உழைப்பால் செய்து கொடுக்கும் அன்பளிப்புத்தான் சிறந்தது, அது மனப்பூர்வமானது, ஏனென்றால் யாருக்குக் கொடுக்கப் போகிறோமோ அவரை நினைச்சு நினைச்சு அந்தப் பொருளைச் செய்வதால் அந்த அன்பளிப்பின் மகிமை கூடுகின்றது…என்று சொன்னவர், நாளைக்கு ஏதாவது விசேசம் இருக்கின்றதா என்று கேட்டார்.

யோகமலர் பின்னிக் குடுத்த றேந்தையின் உழைப்பை பேர்சனல் மனேஜர் சொன்ன விதம் மகிழ்ச்சியைத் தந்தது.

நாளைக்கு யோகமலருக்கு தாலிகட்டப் போவதை யோகமலர் சொல்லத் தயங்குவதை அவள் முகத்தில் கண்ட நான்,சட் டத்திற்கு அப்பால் எமது நிலமையைப் பார்த்து தனது அறிமுகத்தின் மூலம் உதவி செய்ய வந்த ஒருவருக்கு பொய் சொல்லக்கூடாது என்று நினைச்ச நான், „மடம் நாளைக்கு எங்கடை இந்துக் கலாச்சாரத்தின்படி யோகமலருக்கு தாலிகட்டப் போகிறன்’ என்று சொல்ல,’ஓ…வெரிகுட்’ என்றவர், சிறீலங்காவிலை இருக்கிற மனைவிக்கு தெரியுமா „ என்று கேட்க எனக்குச் சுளீர் என்றது.’இல்லை’ என்பது போல தடுமாறினன்.

சில விநாடிகள் தாமதித்த அவர் „அது உங்கடை தனிப்பட்ட உரிமை அதில் நான் நீதிபதியாகச் செயல்பட முடியாது’ என்றவர் „நான் உங்கள் இரண்டு பேருக்கும் ஒரே பக்ரறியில் வேலை எடுத்துத் தந்தும் ஒரே வீட்டில் இருப்பதற்கும் உதவி செய்ய என்னைத் தூண்டியது „போனமுறை நீங்கள் இரண்டு பேரும் என்னைச் சந்தித்த போது யோகமலரிடம் இரண்டு கேள்விகள் கேட்டன், அதில் ஒன்று „உன்னுடைய காதலன் இரண்டு வருடங்கள் சிங்கப்பூரில் இருக்கப் போகிறார், அவருக்குப் பெண் சுகம் தேவைப்படும் பட்சத்தில் அவர் பாலியல் தொழிலாளியிடம் போக அனுமதிப்பீர்களா என்று கேட்ட போது உங்களுடைய கைகளுக்குள் தனது கையைச் செருக்கிக் கோண்டே வேகமாக அதற்குத்தான் நானிருக்கிறேனே என்றது.இரண்டாவது கணவராக நினைத்துக் கொண்டு இருக்கும் இவர் இரண்டு வருட வேர்க் பெமிற் முடிய சிறீலங்காவிற்கு போனால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது அவருக்கு மனைவியாக கொஞ்ச நாளாவது வாழ்ந்துவிட்டு அவர் சிறீலங்காவிற்கு போக முன்பு அவர் மடியிலேயே உயிர் விட்டு விடுவேன் என்று சொன்ன வார்த்தைகள் சாதாரண வார்த்தைகள் அல்ல.தியாக வார்த்தைகள் என்னைத் திகைப்படையச் செய்த வார்த்தைகள்.

நான் வீட்டுக்குப் போனதற்குப் பிறகும் இப்படியும் ஒரு பெண்ணா என்று யோசிச்சுக் கொண்டிருந்தன் „ என்றவர்’ நீங்கள் இருவரும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் குட்லக் „ என்று சொல்லி எங்களிருவருக்கம் கைலாகு தந்தவர் எங்களுடனேயே தனது அறையை விட்டு வெளியே வந்து தனது அறையைப் பூட்டியவர்,’சரி நான் வீட்டுக்குப் போகிறன் குட்பை என்றவர், நாங்கள் அகமட்டின் அறையை நோக்கி மீண்டும் போக அவர், நேராக நடந்து போய்க் கொண்டிருந்தார்.

அகமட்டைச் சந்திச்சு அவர் செய்த உதவிகளுக்கு மிக்க நன்றி என்ற சொன்ன நாங்கள், சாய்ச்சிக்குப் போனதற்குப் பிறகு ஒரு நாள் உங்களையும் உங்களுடைய மனைவியையும் லஞ்சுக்கு இன்வைற் பண்ணுவோம், கட்டாயம் இரண்டு பேரும் வரவேணும் என்று சொல்ல,’தாங்யூ கட்டாயம் வருவம், நாளை தொடங்கும் உங்களுடைய வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்கள் „ என்று சொல்லி அகமட் கைலாகு தந்தார்.

நாங்கள் இருவரும் அவரின் அறையைவிட்டு வெளிக்கிட வேலை தொடங்குவதற்கான மணி அடித்தது.

இருவரும் வேகமாக நடந்து போய் எங்களுடைய வேலைகளைச் செய்ய ஆரம்பித்தோம்.

எந்தப் பிரச்சினையுமில்லாமல் எல்லா மிசின்களும் வேலை செய்தததால் நிம்மதியாக இருந்தது.

இடைவேளையின் போது யோகமலர் மகிழ்ச்சியில் பூரித்துப் போய் நின்றாள்.உருளைக் கிழங்கையும் முட்டையையும் பொரித்து சம்பாச் சோற்றில் கலந்து கொண்டு வந்து தந்தாள் .

வழமை போல ஒரே பிளாஸ்ரிக் பெட்டியிலிருந்து இரு கரண்டிகளால் எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.சாப்பிட்டு முடிந்ததும் சுடுதண்ணிப் போத்தலிலிருந்து பாலை கப்பில் ஊற்றித் தந்தாள்.

வழமையாக இஞ்சிக் கோப்பியே தருவாள் .ஆனால் பாலை ஊற்றித் தந்தாள்.பாலைக் கவனித்தேன் அது மஞ்சள் நிறத்தில் இருந்தது.

„பால் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கின்றது „ என்று கேட்க ,’குங்கமப்பூ போட்டிருக்கிறன்’ என்றாள்.பால் சூடாக இருந்தது மட்டுமல்ல, பால் விட்டுக் கொண்டு வந்த சுடுதண்ணிப் போத்தலும் புதுசாக இருந்தது.

பாலை எனக்கு தந்துவிட்டு தானும் குடிச்சாள்.’ ஏன்ன இன்றைக்கு பால் கொண்டு வந்திருக்கிறியள் „ என்று கேட்க,’இன்றிரவு நானும் நீங்களும் எந்த யோசனையுமில்லாம தூங்கனும்ங்க பால் குடிச்சால் நல்ல தூக்கம் வரும், நாளைக்கு நமக்கு தூக்கம் வருமான்னு தெரியல என்றவள் என்னை வெட்கத்துடன் பார்த்துச் பூடகமாச் சிரிச்சாள்.

நானும் அதை இரசிச்சன்.’ அது சரி தாலி எங்கை கட்டிறது கோவிலிலா „என்று கேட்க, „ அது சேர்பிறைஸ், பிளீஸ் கேட்காதீங்க’ என்றாள்.

நேற்று அவள் பதட்டமாகவிருந்தாள், இன்று அந்தப் பதட்டம் அவளிடம் இல்லை.இடைவேளைக்குப் பிறகும் எந்த மிசினும் தொந்தரவு படுத்தவில்லை.

வேலை முடிய இருபது நிமிடங்கள் இருக்கும் போது சாவிகள் இருக்கும் பெட்டியை பூட்டி இன்னொரு செற்றப் மென்னிடம் கொடுத்து அவனுக்கு குட்பை சொன்னதுடன், எனக்குத் தெரிந்த சிலருக்கு கைலாகு கொடுத்து குட்பை சொன்னன்.

ஆசா புரடக்சன் பகுதியிலிருந்து கைகாட்டினாள்.அவளைத் தேடிச் சென்று குட்பை என்று சொல்லிக் கைகொடுத்தன்.அவள் அர்த்தமான புன்னகையுடன் குட்லக் என்று கைலாகு தந்தாள்.

யோகமலர் எல்லாரிடமும் சென்று குட்பை சொல்லவில்லை.கம்பாயம் தைச்சுத் தந்த மலேய் பெண்ணிடமும் இன்னும் இரண்டொருவரிடம் மட்டும்; குட்பை சொன்னாள்.

வேலை முடிஞ்சு யோகமலரின் பஸ் நின்ற இடத்திற்கு அவளை அழைச்சுச் சென்று அவள் பஸ்ஸில் ஏற நானும் ஏறி அவளின் தோழிகள் மூவருக்கும் குட்பை சொல்லி கைலாகு குடுத்துவிட்டு, யோகமலருக்கு அருகில் போய் நிற்க, வீட்டுக்குப் போய் நல்லாத் தூங்குங்க, மோர்னிங் நான் தந்த அட்ரசுக்கு சீக்கரமாகவே வந்துடுங்க, நெஞ்சு திக் திக் என்று அடிக்குதுங்க..’ என்று அவள் சொல்ல„பயப்படமால் போங்கள் „ என்று ஆறுதல் படுத்தினேன்.நான் பஸ்ஸை விட்டு இறங்க, நான் இறங்கும் வரைக்கும் காத்திருந்தது போல பஸ் புறப்பட, யோகமலர் கைகளை அசைத்து காட்டிக் கொண்டு பஸ் எனது பார்வையிலிருந்து மறையும் வரை பஸ் யன்னலுக்குள்ளால் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எனது பஸ்ஸை நோக்கிப் போன நான் சில விநாடிகள் தாமாதிச்சு இன்றுவரை வேலை செய்த ஜிஇ பக்ரறியைப் பார்த்தேன்.ஜிஇ என்ற ஆங்கில எழுத்து பக்ரறியின் முகப்பில் பெரிதாகப் பொருத்தப்பட்டிருந்தது.

அதைப் பார்த்துக் கொண்டே மனுதுக்குள் என்னையும் யோகமலரையும் சந்திக்க வைச்ச ஜிஇ குட்பை என்று சொல்லிக் கொண்டே நான் போக வேண்டிய பஸ்ஸை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *