கவிதைகள்

பெருமனது தருவாயே பெருமாளே!… கவிதை… ஜெயராம்சர்மா

கொடியவினை எனையகல
குடிமுழுது விடிவுபெற
அடிதொழுது பரவிவிட – அருளாயே

மனமுருகி தினமுமுனை
தொழுதழுது பாடிவிட
அருகிலெனை அணையவிடு – பெருமாளே

உலகிடையே நாளுமுனை
ஒருபொழுது மறவாத
பெருமனது தருவாயே – பெருமாளே

மனதிலுறை குறையகல
மனநிறைவு எனையடைய
தினமுமெனை காவாவாயோ – பெருமாளே !

( குற்றுப் போடாமல் பதங்கள்வர அமைந்த திருப்புகழ் )

மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

3 Comments

  1. மிகப் பெருமுயற்சி. அருமையான பாடல். வாழும் அருணகிரிநாதருக்கு கோடானு கோடி வணக்கங்கள்.

  2. மிகப் பெருமுயற்சி. அருமையான பாடல்.
    வாழ்ந்து கொண்டிருக்கும் அருணகிரிநாதருக்கு கோடானு கோடி வணக்கங்கள்.

  3. சாதனை மிக்கப் பெருமுயற்சி. அருமையான பாடல்.
    வாழ்ந்து கொண்டிருக்கும் அருணகிரிநாதருக்கு கோடானு கோடி வணக்கங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button