Featureகட்டுரைகள்

ஆரவாரமாக நிறைவு பெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலும் ஈழத்தமிழர்களும்!… ஏலையா க.முருகதாசன்.

தமிழர்கள் என்றால் அவர்கள் ஆரவாரமானவர்கள் என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் எல்லா இடத்திலும் நிரூபித்து வருகிறார்கள்.

ஈழத்தமிழர்கள் என்னதான் தமிழகத் தமிழர்களுடன் ஒப்பீடு செய்ய முடியாதவர்கள் எனினும் தமிழகத் தேர்தல் நிலவரங்களையோ அல்லது இந்திய நாடாளுமன்றத் தேர்தலையோ அவர்கள் கவனிக்கத் தவறுவதில்லை.

அதற்குக் காரணம், எப்பொழுது இலங்கையில் தமிழர்களின் உரிமைப் பிரச்சினை எழுந்ததோ அன்றிலிருந்து தமிழக அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையை தீரத்து வைப்பார்கள் என்ற இலங்கைத் தமிழர்கள் எதிபார்த்தது போல, அதே எதிர்பார்ப்பை மத்திய அரசில் ஆட்சி அமைப்பவர்களிடமும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து இலவு காத்த கிளியாக ஏமாந்து நிற்கின்றது ஈழத் தமிழினம்.

பக்கத்து வீட்டுக்காரனைப் பகைத்துக் கொண்டு கடலுக்கப்பால் இருப்பவர்களை நம்புவதில் அயல் வீட்டுக்காரனான தனது நாட்டுக்காரனையே பகைத்துக் கொண்ட இனமாக ஈழத்தமிழினத்தைக் கருதலாம்.

தமிழகத்தில் திமுக வின் வருகையைத் தொடர்ந்து ஈழத்தமிழருடன் தமிழக அரசுகளின் நெருக்கம் அதிகமாகியது.அதுமட்டுமல்லாது தமிழக சஞ்சிகைளும் தமிழகத் திரைப்படங்களும் இந்த நெருக்கத்தை அதிகரிக்கச் செய்தன.

இலங்கையில் வாழ்ந்து கொண்டே தமிழகமே எமது தாய்வீடு என்று பொருத்தமற்ற அன்பு பாராட்டடியவர்கள் ஈழத்தமிழர்கள்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் இந்தியப் பிரதமரானால் இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி இருபத்திநான்கு மணித்தியாலத்தில் தமிழீழத்தை அமைத்துக் கொடுப்பேன் என்ற போது இது சாத்தியமாகுமா என்று எதைப் பற்றியுமே சிந்திக்காது புளகாங்கிதம் கொண்டு கற்பனை உலகிலும் கனவுலகிலும் மிதந்தவர்கள்தான் ஈழத்தமிழர்கள்.

இது போல 1987 ஆண்டென்று நினைக்கிறேன்.பழ.நெடுமாறன் அவர்கள் ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு 80 படகுகளில் புறப்படுகிறேன் என்றவுடன் பழ.நெடுமாறன் வல்லமை பொருந்திய ஒரு நாட்டின் தலைவர் சக இராணுவத் தளபதி என்ற மாயை நினைப்பில் புளகாங்கிதமடைந்தவர்கள் ஈழத்தமிழர்கள்.அதிலும் தாயகத்தைவிட புலம்பெயர்ந்த தமிழர்கள் இச்செய்தியால் வானத்திற்கும் பூமிக்குமிடையில் தொங்கித் தொங்கி விழுந்தவர்கள்.

நினைத்தவுடனே படகில் எறி பலரையும் எற்றி பழ. நெடுமாறன் கடல் பயணத்திற்கு அனுமதியே இல்லாமல் இலங்கைக் கரையை அடைந்தால் இலங்கையரசு பயந்து நடுங்கிவிடும் என்று ஈழத்தமிழர்கள் சிலர் நினைக்கத்தான் செய்தார்கள்.பழ.நெடுமாறன் அவர்களும் தானும் இப்படி ஒரு வெருட்டல் விட்டால் இலங்கையரசு பயந்துவிடலாம் என்று நப்பாசையையும் கொண்டிருக்கலாம்.

சொல்லுவார் சொன்னாலும் கேட்பாருக்கு மதி எங்கே போச்சுது என்பார்களே அதை ஈழத்தமிழர்கள் உணரவேயில்லை.

இறுதிப்போர் நடந்த போது கலைஞர் கரணாநிதி அனைத்து பாதுகாப்பும் சகிதமாக மூன்று மணித்தியால உண்ணாவிரதமிருந்து தன்னால் போர்

நிறுத்தப்பட்டுவிட்டது என்று அறிக்கையொன்றை விட்டிட்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

அதைக் கேள்விப்பட்ட ஈழத்தமிழர்களாகிய நாம் கலைஞர் கருணாநிதியால்தான் போர் நிறுத்தப்பட்டது என்றுகூட எம்மில் பலர் நம்பத்தான் செய்தார்கள். அந்தளவிற்கு நாம் விபரம் கெட்டவர்களா முட்டாள்களா என்பதுதான் புரியவில்லை.

ஒரு முறை சாப்பிட்ட சாப்பாடு செமிச்சு முடிய கிட்டத்தட்ட மூன்ற மணியத்திளயாலங்கள் செல்லும்.அதற்குத் தக்கதாக கலைஞர் கருணாநிதி மூன்ற மணித்தியாலத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

தமிழக அரசியல்வாதிகள் தமது அரசியல் நகர்வுக்காக பிரச்சாரத்திற்காக ஈழத்தமிழர் பிரச்சினையையும் தொட்டுக் கொள்ள ஊறுகாயாக பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை அவர்களே அறிவார்கள்.

ஈழத்தமிழர்களாகிய நாங்கள் ஈழத்தமிழர்கள் பற்றி தமிழக அரசியல்வாதிகள் ஏதாவது நாலு வார்த்தை சொல்லிவிட்டாலே போதும் புழுகத்தில் குதிக்கிறோம்.

நடந்து முடிந்த தமிழகத் தேர்தலின் போது அரசியல்வாதிகள் ஆங்காங்கே ஈழத்தமிழரைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டதை, தேர்தல் வந்தாலே போதும் இலங்கைத் தமிழரைப் பற்றிப் பேசத் தொடங்கிவிடுவார்கள் என்று பொதுமக்களே சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எப்படித்தான் தலையாலை மண் எடுத்தாலும் மத்திய அரசின் முடிவு இல்லாமல் எதையுமே செய்ய முடியாது என்பது தமிழக அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும்.

ஈழத்தமிழரைச் சொற்சிலம்பங்களால் குளிரப் பணணலாம் தம்மீது அபிமானம் எற்படும் என்று தெரிந்து அவர்கள் எம்மை

உசுப்பேத்த ஈழத்தமிழர்களாகிய நாங்களும் செடில் குத்திய காவடி ஆட்டக்கார்கள் மாதிரி ஆடிக் கொண்டிருக்கிறோம்.

நடிகர்களும் சராசரி மனிதர்களே அவர்கள் நடிப்பு என்று தொழிலைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியாது, நடிகர்கள் என்றால் பூமிக்கு வராது வந்த அதிசயமான மனிதர்கள் என நினைத்து அவர்கள் வாக்களிக்க வந்ததே புதுமையான விசயமாக அவர்களுக்கு இடைஞ்சல் கொடுத்து நின்ற விழுதோசி முட்டாள் இரசிகர்களை பார்த்தோம்.

 

இதைவிட வாக்களிக்கும் போது இருந்த மறைப்பையும் வாக்களிக்கும் போது வாக்களித்த சின்னத்தையும்கூட படம்பிடித்து வெளியிட்டதைப் பார்க்கும் போது தமிழகத்தின் தேர்தல் விதிகள் பலவீனமானவை என்பது தெட்டத் தெளிவாகவே தெரிகின்றது.

சினிமா மாயைக்குள்ளும் அரசியல் மாயைக்குள்ளும் உழன்று கொண்டிருக்கும் தமிழகத்தை ஈழத்தமிழினமே நம்பாதே.உன் அயலவனான அடுத்த வேலிக்காரனையே நம்பு.06.04.21 அன்று நடந்த தமிழகத் தேர்தல் பல விடயங்களை ஈழத்தமிழர்களுக்குப் புகட்டியிருக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *