கட்டுரைகள்

பாலியல் பலாத்காரமும் மானிட மனோநிலையும்…..பகுதி…3…. ( கட்டுரை )…. சங்கர சுப்பிரமணியன்.

பாலியல் பலாத்காரமோ அல்ல கூட்டு பாலியல் பலாத்காரமோ அதற்கும் மானிட மனோநிலைக்கும் நிறையவே சம்பந்தம் இருக்கிறது. தனியாக அகப்பட்டுக்கொண்ட பெண்ணை துரத்தி கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் மனநிலையைப் பார்ப்போம். இவர்கள் பெரும்பாலும் நல்ல குடும்பத்தில் பிறந்து பெற்றோர்களால் நல்லமுறையில் வளர்க்கப் படாதவர்களாக
இருப்பார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் தாயிடம் அன்போ தகப்பனிடம் பாசமோ மரியாதையோ இருக்காது.

இவர்கள் அக்கா தங்கை என உடன் பிறப்புக்களுடன் பிறந்திருப்பார்களா என்பது சந்தேகமே. அக்காதங்கைகளுடன் பிறந்தவர்களுக்கு அவர்களிடம் அன்பும் பாசமும் இருந்தால் இன்னொரு பெண்ணைத் தொடும்போது அவர்களுக்கு தன் அக்காவையோ தங்கையையோ மற்றவன் தொட்டால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் வரும். இவர்கள் மற்றவர்கள் துன்பமடைவதை விரும்பும் மனப்பான்மை கொண்டவர்கள். இவர்கள் பெரும்பாலும் குடும்பத்தோடு ஒட்டின்றி ஏதோ ஒருவகையில் உழைத்து கொள்கையோ குறிக்கோளோ இன்றி மனம்போனபடி வாழும் மனப்பாங்கு கொண்டவர்கள். இவர்களுக்கு மானம் மரியாதை என எதுவும் கிடையாது. அகப்பட்டால் அவமானம் ஏற்படுமே என்றுகூட எண்ணிப் பார்க்கமாட்டார்கள். பிடிபட்டாலும் ஏதோ சாதனை புரிந்த மாதிரி கொஞ்சமேனும் கூச்சமின்றி தலைநிமிர்ந்து வருவார்கள்.

விபச்சாரத்திலும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை எதிர்கொள்ளும் நிலை பெண்ணுக்கு ஏற்படுகிறது. ஆனால் இங்கே இது பெண்ணின் அனுமதியுடன் அரங்கேறுகிறது. இங்கும் பெண்கள் சித்திரவதைக்கு ஆளானாலும் அதற்கும் ஒரு எல்லை இருக்கும். அந்த எல்லைக்குட்பட்டே இருக்கும். அதிக காயங்கள் ஏற்படும்படியோ அதனால் சிகிச்சை பெறும் அளவுக்கோ அல்லது மரணம் நிகழும்படியோ எதுவும் நிகழ்வதில்லை.

ஆரம்ப கட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளானாரும் போகப்போக அந்த வாழ்க்கையோடு ஒன்றிவிடுவார்கள். இதை நோக்கி செல்லும் ஆண்கள்
கௌரமானவர்கள் என்று சொல்வதற்கில்லை. நம் மனசாட்சிப் பிரகாரம் அவர்கள் கௌரவமற்றவர்களே. பொதுவெளியில் இதுபோன்ற பழக்கம் இருக்கிறது என்பது தெரியாதவரை இவர்கள் மற்றவர்கள் கண்ணுக்கு கௌரவமானவர்கள். இவர்களால் அப்பெண்ணுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுவதில்லை. சமூகத்துக்கும் இவர்களால் எவ்வித பிரச்சனையும் ஏற்படுவதில்லை. சொல்லப்பபோனால் இவர்களால் சமூகத்துக்கு நல்லதே ஓரளவுக்கு நடக்கிறது எனலாம். இவர்கள் தேவைப்படும்போது அதற்கென்றுள்ள இடங்களை நாடுகிறார்கள். சமூகத்தில் பாலியல் பலாத்காரங்கள் நடப்பது இவர்களால் ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளது.

கடைசியாக, இராணுவத்திடம்
போர்க்கைதிகளாக சிறைபடும் பெண்களும் பெண் போராளிகளும். போர்க்கைதிகளை ஆணோ அல்ல பெண்ணோ அவர்களை எப்படி நடத்தவேண்டும் என்ற அனைத்துலக சட்டம் என்று ஒன்று இருக்கிறது. அதன்படித்தான் நடத்த வேண்டும். இது நேர்மையான நாட்டில் நேர்மையான அரசும் மக்களும் இருந்தால் மட்டுமே சாத்தியம். நேர்மையற்ற நாட்டில் நேர்மையற்ற அரசும் லஞ்சம், கற்பழிப்பு, இன, மத விரோதம் மலிந்து வாழும் மக்கள் நிறைந்த நாட்டில் இராணுவத்திடமும் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. சிறைபிடிக்கப்பட்ட
பொதுமக்களில் பெண்கள் இராணுவத்தினர்
பாலியல் பலாத்காரத்துக்கு உட்படும்போது அது மிகவும் கொடுமைதான்.

இருப்பினும் அது நான் முதலில் குறிப்பிட்ட தனிமையாக பலரிடம் மாட்டிக் கொண்டு இறந்து போகும் பெண்ணின் அளவுக்கு இராது என்பது என் கருத்து. ஏனென்றால் அவர்களுக்கு மேலுள்ள அதிகாரிகளுக்கு பதில் சொல்லவேண்டும். அடுத்து பெண் போராளிகளுக்கும் இதே நிலைதான். ஆனால் பெண் போராளிகளை பாலியல் பலாத்காரம் செய்யும்போது இராணுவத்தினருக்கு அவர்களை அவமானப் படுத்துகிறோம் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும். மேலும் பெண் போராளிகள் இதையெல்லாம் எதிர்பார்த்திருப்பார்கள். அவர்களுக்கு போர்ப்பயிற்சி கொடுக்கும்போது இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கப்படும். அவர்கள்
போராளியாகமாற உறுதி கொண்டபோதே எல்லாவகையான கொடுமைகளையும் ஏற்கத் துணிந்துவிடுகிறார்கள். உயிரை
இழக்க நேர்ந்தாலும் அதற்கும் தயாராக அதை எதிர்கொள்ளும் மனவலிமையையும்
பெற்றிருப்பார்கள்.

இராணுவத்திடம் சிறைபட்ட பெண்களையும் பெண்போரளிகளையும்
பாலியல் பலாத்காரம் செய்யும் இராணுவத்தினரின் மனநிலை வேறுமாதிரியாக இருக்கும். முதலில் தம்மிடம் சிறைபட்டவர்கள் என்ற திமிர் இருக்கும். அவர்களை அவமானப் படுத்துகிறோம் என்ற எண்ணமே பாலியல் பலாத்காரத்தை விட மேலோங்கி நிற்கும். அவர்கள் அச்செயலில் ஈடுபடுவதே அவர்கள் தோற்றவர்கள் என்றும் அந்த தோல்வியை அவர்கள் மனதில் சுவடாக மாற்றவே பாலியல் பலாத்காரத்தை கையிலெடுக்கிறார்கள். அந்த அவமானத்தில் அவர்கள் கூனிக்குறுக வேண்டும் என்பதே இராணுவத்தினரின் மனநிலையாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

பெண் இராணுவ உளவாளிகளும் பெண் போராளிகளும் எதிரி இராணுவத்திடம் சிறைபடும்போது பின் விளைவுகள இருவிதமாக இருக்கும். இந்த பின் விளைவுகளை பொதுவில் நின்று நடுநிலைக் கண்ணோட்டத்தோடே அணுக வேண்டும். இப்போது பின்விளைவுகளைப் பார்ப்போம். எதிரி இராணுவம் நேர்மையானதாக இருந்தால் உலகநாடுகளால் வரையறுக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றுவார்கள். அதவே எதிரி இராணுவம் நேர்மையற்றதாக இருந்தால் நடைமுறைகளை அவர்கள் விருப்பத்துக்கு கையில் எடுத்துக் கொள்வார்கள். இதுதான் இதுவரை உலக வரலாற்றில் நடந்திருக்கிறது. இது பொதுவாக போராளிகளுக்கும் சிறைபட்ட பெண் போராளிகளுக்கும் நன்றாகவே தெரியும். இதையெல்லாம் தெரிந்தே போராளிகள் போராடுகிறார்கள். இல்லையெனில் போரடவே மாட்டார்கள். அவரகளுக்கு குறிக்கோள் ஒன்றே இலட்சியம். மற்றதெல்லாம் அப்புறம்தான்.

பாலியல் பலாத்காரத்தில்,
பொதுவாழ்க்கையில் சமூகத்தின்மேல் நம்பிக்கை வைத்து வாழ்ந்து வரும் ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு ஏற்படும் கூட்டு பாலியல் வன்முறையையும் சந்தர்ப்ப வசத்தால் பாலியல் தொழிலில் இருக்கும் பெண்ணுக்கு ஏற்படும் பலாத்காரத்தையும்
எதிரி இராணவத்திடம் சிறைக்கைதிகளக இருக்கும் பெண் போராளிகளுக்கு இராணுவத்தினரால் ஏற்படும் பாலியல் பலாத்காரத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது. அதேசமயம் பாலியல் பலாத்காரம் என்பது வருந்தத்தக்க துன்புறு செயல் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

பாலியல் பலாத்காரமும் மானிட மனோநிலையும் என்ற இக்கட்டுரையில் பெண்கள் எவ்வாறான சூழல்களில் எல்லாம்
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறார்கள் என்பதை விவரித்திருக்கிறேன். அத்தோடு அந்தந்த சூழலில் பாலியல் பலாத்காரம் செய்பவர்களின் மனோநிலை எப்படி இருக்கும் என்பதையும் ஓரளவுக்கு விளக்கியுள்ளேன். ஒரு படைப்பை உருவாக்கும்போது அதற்குண்டான கருவை படைப்பாளிகள் சமூகத்திடமிருந்தே பெறுகிறார்கள். அதேபோல் இக்கட்டுரை எழுதவும் கருத்தை இச்சமூகத்திடமிருந்தே பெற்றேன் என்றுகூறி இக்கட்டுரையை முடிக்கிறேன்.

(முற்றும்)

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button