கட்டுரைகள்

பார்க்கும் பார்வையில்……? சங்கர சுப்பிரமணியன்.

எதையும் நாம் பார்க்கும் பார்வைதன் அதன் தன்மையை உணர்த்துகிறது. ஒரே விசயம் நல்லதாகவும் தீயதாகவும் தெரியும். கடவுளை எடுத்துக் கொள்வோம் எல்லாம் அவரால்தான் நடக்கிறது என்பவர்களுக்கு அவர் கடவுள். இல்லை எல்லாம்  நாம் ஆற்றும் வினையால் நடக்கிறது என்பவர்கள் கடவுளை அனாவசியமாக உள்ளே இழுக்கமாட்டார்கள்.

இப்போது ஒரு நிகழ்வின் மூலமாகவே அனுகுவோம். இப்போது உலகையே அச்சுறுத்தி ஆயிரக்கணக்கில் உயிரை பறிப்பதுடன் இலட்சக் கணக்கில் உயிரோடு கொரோனா விளையாடிக் கொண்டிருக்கிறது. இப்போது நாம் உண்மையிலேயே நேர்மையானவர்களாக இருந்தால் நெஞ்சில் கைவைத்து மனசாட்சியோடு சொல்வோம். எல்லாம் அவன் செயல் என்றால் இந்த கரோனா வைரஸும் அவன் செயல்தானே?

ஆனால் நான் அப்படிச் சொல்லமாட்டேன். ஏனென்றால் நான் எல்லாம் அவன் செயலென்று வீண்பழியை
கடவுள் தலையில் தூக்கிப்போட
மாட்டேன். எய்தவனிருக்க அம்பை நோகலாமா? கூடாதல்லவா? ஆகவே இந்த பேரழிவுக்கு வித்திட்டு தோற்றுவித்த மனிதனைவிட்டு அநியாயமாக அவன்மேல் பழிபோடுதல் அபத்தம்.

“செவிக்குணவில்லாத போது சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்.” என்றார்
வள்ளுவர். வள்ளுவர் எல்லாம் சரியாகத்தான் சொல்லியிருப்பார். வயிற்றுக்கு உணவு சரி. அது என்ன செவிக்கு உணவு? செவிக்கு பசிக்குமா? பசிக்கும். அந்த பசிக்கு பெயர்தான் தேடல். நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றன. இந்த ஐம்புலன்களுக்கும் தேடல் எனும் பசி இருக்கவே செய்கிறது.

இனி இந்த ஐம்புலன்களின் தேடல்களையும் அவற்றின் பின் விளைவுகளையும் அவை எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதையும் பார்ப்போம். முதலில் கண்களை எடுத்துக்கொள்வோம். கண்கள் விதவிதமாகப் பார்க்கிறது. அந்த கண்களுக்கு விருந்தளிக்க பல இயற்கைகாட்சிகளை கண்டு களிக்கிறோம். அதற்காக உல்லாசப்பயணங்களெல்லாம் செல்கிறோம். திரைப்படங்களை கண்டு களிக்கிறோம். இப்படி பலப்பல. இந்த கண்கள் நல்லதையும் பார்க்கிறது கெட்டதையும் பார்க்கிறது.

காதுக்கும் இந்த தேடல் எனும் பசி இருப்பதால் கேட்கிறோம். பல இன்னிசை கச்சேரிகளைக் கேட்கறோம். திரை இசைப்பாடல்களை கேட்டு மகிழ்கிறோம். பெரிய பேச்சாளர்களின் பேச்சை செவிமடுக்கிறோம். பக்தர்களோ இன்னும் ஒருபடி மேல்போய் கதாகாலட்சேபம், பஜனை போன்றவற்றில் லயித்து இறைவனிடம் ஐக்கியமாகிவிட இந்த காதின் பசி உதவுகிறது.

அடுத்ததாக  மூக்கு. பல மணங்களை நுகர்கிறது. நாற்றத்தையும் துர்நாற்றத்தையும் நுகர்கிறது. நறுமண மலர்களின் நாற்றத்தை உணரும் நாசி உப்பிலிட்டு பதப்படுத்திய மீன்களின் துர்நாற்றத்தையும் நுகர்கிறது.
நான்காவதாக வாய். வாயைக்கட்டுப் படுத்து என்றால் ருசிக்காக சாப்பிடாமல் நாவைக்கட்டுப் படுத்து என்று பொருள். சுவைதான் நாவின் பசிக்கு உணவு. இந்த நாக்கு பலவிதமான சுவைக்கு பழக்கப்படுவதால் வீட்டில் மட்டுமின்றி பலவிதமான வித்தியாசமான சுவையுள்ள உணவுகளைத்தேடி பல உணவகங்களை நாடுகிறோம். அடுத்ததாக பிரச்சனைக்குரிய மெய் எனும் உடல். இயற்கையினால்
இனவிருத்திக்காக கொடுக்கப்பட்ட பசி பருவ வயதில் மட்டுமே வருகிறது.

இந்த பசி இயற்கையாக வரும்போது மற்ற பசியினைப்போல் நினைத்ததும் அடக்கிவிட முடியாது. பண்டைய காலத்தில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலத்தில் இப்பசியை நினைத்தவுடன் போக்கியதைப்போல இக்காலத்தில் அப்பசியை போக்கமுடியாது. இதற்கு நாகரிகம் என்ற சமூகக்கட்டுப்பாடு உள்ளது.
இந்த சமூகக் கட்டுப்பாடு என்பது உயர்வு தாழ்வு, பொருளாதாரம் போன்றவைகளை உள்ளடக்கியது. சமூகக் கட்டுப்பாடற்ற ஆதிகாலங்களில் இப்பசியை போக்கும்போது ஏற்படும் பின்விளைவுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியதில்லை.

இனி சற்று மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுத்து பாகுபாடற்று எவ்வித பேதமுமின்றி சமநிலையில் நின்று ஒரு வேள்வியாக எண்ணி அது என்னதான் சொல்கிறதென்பதைக் கேட்போம். ஐம்புலன்களில் இந்த மெய் எனும் புலனின் உடற்பசியை அடக்கும்போது மட்டும் கட்டுப்பாடுகள் அதிகம். நினைத்ததைப் பார்ககமுடியும் அது நல்லதோ கெட்டதோ? நினத்தவற்றை கேட்க முடியும் அது தாலாட்டு முதல் ஒப்பாரிவரை எதுவாக இருப்பினும். விரும்பியவற்றை நுகரமுடியும். விரும்பியவற்றை உண்ணமுடியும் அது வீட்டிலானாலும் சரி அல்லது வெளியினாலும் சரி.

ஆனால் உடல் பசியை அப்படி போக்கிவிடுவது எளிதல்ல. அதில்
கட்டுப்பாடு உள்ளது. இந்தகட்டுப்பாடு நாகரிகமடைந்து வாழ மனித இனம் தலைப்பட்டபின்பே உருவானது. இந்த கட்டுப்பாடு ஆதிகாலத்தில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளும் வகையில் மறுக்கவோ மறைக்கவோ முடியாத சான்றுகளுடன் காணலாம்.

நம்மை வழிநடத்துவதாகச் சொல்லப்படும் போற்றத்தக்கதாக மதிக்கத்தக்கதாக சொல்லப்படுகிற சில காவியங்களிலில் இவற்றறைக் காணலாம். ஆதலால் மனிதன் நாகரிகம் அடையாத காலத்தில்
எல்லாவற்றையும்  எழுதி இருக்கிறான். அதையே
“எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”
என்கிறது தமிழ் மறை. இதைத்தான் பகுத்தறிவு என்கிறோம். இதை அது பூச்சாண்டி, கிட்டபோனால் பிடித்துக் கொள்ளும் என்று சிறு பிள்ளைகளுக்கு எதையோ சொல்லி பயமுறத்துவதுபோல மனிதனை சிந்தனை செய்ய விடாது சமூக நலன்களில் அக்கறை இல்லாதவர்கள் புத்தியை மழுங்கடித்துள்ளார்கள்.

“வேப்பமர உச்சியில் நின்று பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க
உந்தன் வீரத்தை பிஞ்சிலேயே கிள்ளிவைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக்கூட நம்பைவிடாதே
நீ வீட்டுக்குள்ளே அடைந்து
கிடந்து வெம்பி விடாதே”

என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீரத்துக்கு மட்டும் சொல்லவில்லை அறிவுக்கும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கிறார்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button