அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் 14 ஆவது ஆண்டு நிறைவு விழா!

அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் 14 ஆவது ஆண்டு நிறைவு விழா! இசையருவி பாடல் போட்டி 2025

மாபெரும் இசை நிகழ்ச்சியும் உள்நாட்டு, வெளிநாட்டு படைப்பாளிகள் கலைஞர்கள் கெளரவிப்பும்

இசையருவி போட்டியில் பங்கு பற்றுவோருக்கான விபரங்கள்…..

இப்போட்டியில் இலங்கையில் எங்கு வாழ்பவர்களும் பங்குபற்றலாம். வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பாட விரும்பின் சிறப்பு பாடர்களாக இணைத்து கொள்ளப்படுவார்கள்.

உங்கள் பாடல்களை 31.05.2025 க்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.

அழகான முறையில் பின்னணி இசையுடன் ஆரம்பம் முதல் நிறைவு வரை முழுமையாக பாடி இரண்டு பாடல்களை எமது மின்னஞ்சல் முகவரியான akkinimusic@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது

எமது வாட்ஸ் ஆப் இலக்கங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

இப்போட்டியில் பங்கு பற்றுவதற்கு எவ்வித கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது.

போட்டிக்கு அனுப்பும் பாடல்கள் ஏற்கனவே மேடை நிகழ்வில் பாடிய காணொளிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

பாடல் காணொளி   எங்களுக்கு கிடைக்கப்பெறும் வரிசை முறைப்படி எமது மியூசிக் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

வெற்றியாளர்கள் தீர்மாணிக்கப்படும் முறை Like | Comments | Share | Views பெறும் வரிசையில் ஐந்து பேர் உள்வாங்கப்பட்டு அக்கினிக்குஞ்சு  14 ஆம் ஆண்டு நிறைவு விழா இசையருவி இசை நிகழ்ச்சியில் பாடும் போது எமது நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள்.

வெற்றியாளர்களுக்கான பரிசு விபரம்

  • 1 ஆவது பரிசு ஐந்து இலட்சம் இலங்கை ரூபா
  • 2 ஆவது பரிசு மூன்று இலட்சம் இலங்கை ரூபா
  • 3 ஆவது பரிசு இரண்டு இலட்சம் இலங்கை ரூபா
  • 4 ஆவது பரிசு ஒரு இலட்சம் இலங்கை ரூபா
  • 5 ஆவது பரிசு ஐம்பது ஆயிரம் இலங்கை ரூபா

அநேகரின் வேண்டுகோளுக்கு இணங்க பாடல் போட்டியில் பங்கு பற்றுவோருக்கான வயது கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

பாடல்கள் அனுப்ப மற்றும் மேலதிக விபரங்களுக்கு:

யாழ்.எஸ்.பாஸ்கர்
610470156818
அவுஸ்திரேலியா

எஸ்.ரோசன்
0701160009
மட்டக்களப்பு

யதுகுலன்
0771877007
கொழும்பு

காந்தன்
0771498485
யாழ்ப்பாணம்

எஸ்.கஜீபன்
0775285093 
யாழ்ப்பாணம்

Loading