இலங்கை

செம்மணிப் புதைகுழிக் காலத்தை மறைக்கச் சதி?; சி.ஐ.டி – சோமதேவவின் நகர்வு குறித்து – சட்டத்தரணி குருபரன் கேள்வி

செம்மணிப் புதைகுழி தொடர்பான காலப்பகுதியை (எந்தக் காலத்திற்குரியது) இழுத்தடிப்பதற்குச் சதி இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் வலுவாக ஏற்படுகின்றது என சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில்  நடைபெற்ற செம்மணி மனித புதைகுழி வழக்கு பற்றிய கலந்துரையாடலில் சட்டத்தரணி குருபரன் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

செம்மணிப் புதைகுழி தொடர்பான காலப்பகுதியை மறைப்பதற்குச் சதித் திட்டங்கள் இடம்பெறுகின்றதா என்ற வலுவான சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது. ஏனெனில், செம்மணிப் புதைகுழி தொடர்பில் கார்பன் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோருகின்றது. அதேநேரம், பேராசிரியர் ராஜ் சோமதேவவும் புதைகுழியின் காலப்பகுதி தொடர்பான ஆய்வுகளுக்குப் பரிந்துரைத்துள்ளார்.

எனவே இந்த இரு தரப்பினரின் நகர்வுக்குப் பின்னால் ஏதோவொரு தொடர்பிருப்பதாக நாம் கருதுகின்றோம். ஆதலால், செம்மணிப் புதைகுழியின் காலப்பகுதியை அறிவதில் நீதிமன்றம் மிகவும் இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அத்துடன், பேராசிரியர் ராஜ்சோமதேவவின் அறிக்கையைக் கருத்திற்கொண்டு அடுத்தகட்ட அகழ்வுப் பணியை மேற்கொள்ளாமல் விடக்கூடாது. அகழ்வுப் பணிகள் இடம்பெற வேண்டும். புதைகுழியின் நிலக்கீழ் தொடர்பின் அடிப்படையில் இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற வேண்டும். செம்மணிப் புதைகுழி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளில் யாரை நியமிக்க வேண்டும் என்பதைவிட யாரை நியமிக்கக்கூடாது என சிந்திக்க வேண்டிய தேவைப்பாடுகள் தற்போது உள்ளன- என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *