உலகம்

பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக வீதியில் இறங்கிய ஆண்கள் ; சுவிட்சர்லாந்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பெண்கள் மீதான வெறுப்புப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுவிட்சர்லாந்தின் தலைநகர் பேர்னில் நூற்றுக்கணக்கான ஆண்கள் எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு முன்னால் நடைபெற்ற இந்தப் பேரணியை, “பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிரான ஆண்கள்” (Men Against Violence Against Women) என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் ஆண்கள் மிகவும் தீவிரமாகத் தலையிட்டு, பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, பதின்ம வயதுச் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இணையத்தளங்கள் ஊடாகப் பெண்களுக்கு எதிரான வெறுப்புப் போக்கு பரவி வருவது குறித்த கவலையே இந்தப் போராட்டத்திற்கான முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இதேவேளை, சுவிட்சர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், 18 முதல் 24 வயதுக்குட்பட்ட ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆண்மை தொடர்பில் இறுக்கமான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *